‘முடிவுக்கு வந்த 27 ஆண்டுகால தாம்பத்திய வாழ்க்கை’!.. விவாகரத்தை அறிவித்தார் பில் கேட்ஸ்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய ‘ட்விட்டர்’ பதிவு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் முன்னணி பணக்காரரான பில் கேட்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை, 1975-ம் ஆண்டு பால் ஆலன் என்பவருடன் இணைந்து பில் கேட்ஸ் தொடங்கினார். அதன் தலைமை செயல் அதிகாரியாகவும் பில் கேட்ஸ் செயல்பட்டார். அதன்பின்னர் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார்.

கடந்த 1987-ம் ஆண்டு மைக்கோசாஃப்ட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டா கேட்ஸ் என்பவரை பில் கேட்ஸ் சந்தித்தார். இதனை அடுத்து 1994-ம் ஆண்டு இருவரும் ஹவாயில் வைத்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2000-ம் ஆண்டு மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கிய பில் கேட்ஸ், லாப நோக்கு இல்லாத வகையில் கல்வி, பாலின சமத்துவம மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் திடீரென இருவரும் விவாகரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளனர். இதுகுறித்து பில் கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 27 ஆண்டுகால தாம்பத்திய வாழ்க்கையில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டுள்ளன.

இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். ஆனாலும், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்கையின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளனர். இவர்களது இந்த அறிவிப்பு தொழில்நுட்ப உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்