வெடித்து சிதறிய 'ராட்சஸ' நட்சத்திரம்.. சூரியனை விட 10 மடங்கு பெருசு.. பால்வழி அண்டத்தில் உருவாகியுள்ள பாதிப்புகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 2020 செப்டம்பர்-16 ஆம் தேதி உலக அளவில் உள்ள வானியலாளர்கள் சூரியனை விடவும் 10 மடங்கு பெரிதாக இருக்கும் பிரமாண்டமான சிவப்பு நட்சத்திரம் ஒன்றை கண்டுபிடித்தனர்.
அந்த நட்சத்திரம் வெடிக்க இருப்பதாகவும் கூறினர். இது பூமியில் இருந்து சுமார் 120 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்துள்ளது. இது வெடிக்க இருப்பதை நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் அறிந்து கொண்டனர்.
வியாழன் கிரகத்தின் சுற்று பாதை வரைக்கும் பாதிப்பு:
அதன்படி இந்த ராட்சத சிவப்பு நட்சத்திரம் தனது இறுதி நிலையை அடைவது கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இதன் வெடிப்பானது சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கிரகத்தின் சுற்று பாதை வரை தாக்கி உள்ளதையும் கண்டுபிடித்தனர். நியான் மற்றும் ஆக்சிஜன் ஆகிய வாயுக்களின் கலப்பினால் பெரும் வெடிப்பை இது ஏற்படுத்தி கொண்டது. மேலும் இதன் இறுதி கட்டத்தில் சிலிக்கான் வாயு மூலமாகவும் பெரும் வெடிப்பு நிகழ்ந்தது என கூறப்படுகிறது.
ஏராளம் வாயுக்கள் வெளியேற்றம்:
கடைசியில் இந்த ராட்சத சிவப்பு நட்சத்திரம் விஞ்ஞானிகள் கூறியது போல் வெடித்து சிதறியுள்ளது. இந்த பெரு வெடிப்பானது மிக பெரிய அளவில் நடந்துள்ளது. இந்த வெடிப்பில் ஏராளமான வாயுக்கள் வெளியாகி உள்ளது. அதோடு, பால்வழி அண்டத்தில் பல்வேறு விதமான மாறுதல்களையும் இது ஏற்படுத்தி உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, கருப்புதுளை என்று கூறப்படும் அறிவியல் கூற்றுடன் இது ஒத்துப் போயுள்ளது.
உறுதி செய்யப்பட்ட நிகழ்வு:
இந்த நிகழ்வின் மூலமாக கோள்கள் அல்லது நட்சத்திரங்கள் தனது வாழ்நாளை முடித்து கொள்வதற்கு இது போன்ற பெரும் வெடிப்பை நிகழ்த்த கூடும் என்பதை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ஆய்வாளர்கள் சூப்பர்நோவா-2 என்ற முறையில் குறிப்பிடுகின்றனர். இது போன்ற பல்வேறு பெருவெடிப்புகள் அவ்வப்போது நடந்துக் கொண்டு தான் உள்ளது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமிக்கு இப்படி நடக்குமா?
இந்த மாதிரியான பெரும் வெடிப்புகள் பூமிக்கு பக்கத்தில் வராத வரை மனித இனத்திற்கு எந்த பாதிப்புகளும் இல்லை. மேலும், இதுகுறித்து பல ஆய்வுகள் தினமும் நடந்து வருகிறது. இவற்றின் மூலம் எதிர் காலத்தில் இது போன்ற பெரும் ஆபத்து பூமிக்கு வந்தால், அதனை எப்படி சமாளிப்பது என தெரிந்து கொள்ளலாம். இதற்காக நாசா போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் பல கோடி மதிப்பில் ஏராளமான செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இதுல வர ஹீட் 15 கோடி டிகிரி செல்சியஸ்...' 'சூரியனை விட 10 மடங்கு வெப்பம்...' - 'செயற்கை சூரியனை' வெற்றிகரமாக இயக்கிய நாடு...!
- 'பூமியின் அளவை விட பெரிதான கருப்பு புள்ளி'!.. 'சூரியனில் ஏற்பட்ட மாற்றத்தால்... வரப்போகும் ஆபத்து 'இது' தான்'!!.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
- "எல்லாரும் நல்லா பாத்துக்குங்க!.. நான் விண்வெளிக்கு போறேன்!".. சூரியனுக்கு புறப்படும் சிம்பன்ஸி!.. நாசாவின் மாஸ்டர் ப்ளான் 'இது' தான்!
- 'மக்களை' வெளியில் 'நடமாட' விட்டால்தான்... 'கொரோனாவை ஒழிக்க முடியும்... 'சூரியஒளி' மாபெரும் மருந்து... மருத்துவர்களின் 'விநோதக் கருத்து...'
- தனது 'செயல்பாட்டை' குறைத்துக் கொண்ட 'சூரியன்...' 'பூமிக்கு ஆபத்தா?...' 'விஞ்ஞானிகள் என்ன கூறுகின்றனர்?'