"முடியாததையும் முடிச்சுக் காட்டுவாங்க".. முக்கிய பொறுப்புக்கு இந்திய வம்சாவளி பெண்ணை தேர்ந்தெடுத்த அமெரிக்க அதிபர்.. யார் இந்த ஆரத்தி பிரபாகர்..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர். ஆரத்தி பிரபாகர் என்பவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தின் இயக்குநராக தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்துள்ளார் அமெரிக்க அதிபர்.

Advertising
>
Advertising

Also Read | ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. தரைமட்டமான வீடுகள்.. சுமார் 255 பேர் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் வசித்துவரும் பிரபல ஆராச்சியாளரான டாக்டர். ஆரத்தி பிரபாகர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்டாண்டர்ட்ஸ் அண்ட் டெக்னாலஜிக்கு (என்ஐஎஸ்டி) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அமெரிக்க செனட் சபையினால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரத்தி, இந்த பொறுப்பை வகித்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார். அதன் பின்னர் டிஃபென்ஸ் அட்வான்ஸ்டு ரிசர்ச் ப்ராஜெக்ட்ஸ் ஏஜென்சியின் (DARPA) இயக்குநராக பணியாற்றினார். இது விமான மற்றும் இணையதள தகவல் திருட்டை ஒழிக்க அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

தலைமை பொறுப்பு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தின் (OSTP) இயக்குநர் பொறுப்புக்கான வாக்கெடுப்பு அமெரிக்க செனட் சபையில் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டாக்டர். ஆரத்தி பிராபகரை பரிந்துரை செய்திருக்கிறார். இதில் ஆரத்தியை செனட் சபை அங்கீகரிக்கும் பட்சத்தில் இப்பதவியை வகிக்கும் அமெரிக்கர் இல்லாத நபர் என்ற சாதனையை படைப்பார் ஆரத்தி. இந்திய - அமெரிக்க சமூக மக்களிடையே ஜோ பைடனின் இந்த முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாராட்டு

இந்நிலையில், ஆரத்தி பிரபாகர் குறித்து பேசிய பைடன்,"டாக்டர் பிரபாகர் ஒரு புத்திசாலித்தனமான மற்றும் மிகவும் மதிக்கப்படும் பொறியாளர் ஆவார். பயன்பாட்டு இயற்பியலாளராக அவர் செய்த பணிகள் மகத்தானவை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையின் அலுவலகத்தை விரிவுபடுத்துவதற்கும், நமது கடினமான சவால்களைத் தீர்ப்பதற்கும், சாத்தியமற்றதைச் சாத்தியமாக்குவதற்கும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளைப் பயன்படுத்துவதற்கும் நம்மை வழிநடத்துவார்" என்றார்.

செனட் சபை பைடனின் இந்த தேர்வை அங்கீகரிக்கும் பட்சத்தில், டாக்டர் ஆரத்தி பிரபாகர்,  அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தலைமை ஆலோசகராகவும், அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் குழுவின் இணைத் தலைவராகவும், அமைச்சரவையின் உறுப்பினராகவும் இருப்பார்.

இதனால் இந்த செனட் சபை வாக்கெடுப்பு அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "புருஷன் விட்டுட்டு போய்ட்டான்.. அந்த பெண்ணை நீ கல்யாணம் செஞ்சுக்க".. மிரட்டிய கும்பல்..விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

DR ARATI PRABHAKAR, SCIENCE ADVISOR, BIDEN, JOE BIDEN, BIDEN NOMINATES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்