உலகின் மர்மமான இடமான பெர்முடா முக்கோணத்துக்கு பயணிக்க இருக்கும் சொகுசு கப்பல்.. பயணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள டேஞ்சரான ஆஃபர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகிலேயே ஆபத்தான இடங்களில் ஒன்றாக கருதப்படும் பெர்முடா முக்கோண பகுதிக்கு செல்ல இருக்கிறது ஒரு சொகுசு கப்பல். அந்த நிர்வாகம் பயணிகளுக்கு அளித்துள்ள ஆஃபர் பற்றித்தான் தற்போது பலரும் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.
பெர்முடா முக்கோணம்
அட்லான்டிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதியில் உள்ள பெர்முடா தீவு, போர்ட்டோ ரிக்கா தீவுகள் மற்றும் ஃப்ளோரிடா நீரிணை ஆகிய மூன்றையும் இணைக்கும் முக்கோண வடிவிலான கடல் பரப்பு Bermuda Triangle எனப்படுகிறது. சிலர் மெக்சிகோ வளைகுடாவையும் இந்த பரப்பினுள் இணைத்து கணக்கிடுகின்றனர். இப்படி பூலோக சர்ச்சைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்தப் பகுதி பல்வேறு மர்மங்களை தன்னிடத்தே கொண்டிருக்கிறது.
1812 ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அமெரிக்காவின் தெற்கு கரோலைனா மாகாணத்தில் உள்ள சார்லஸ்டன் துறைமுகத்திலிருந்து கிளம்பிய 'பேட்ரியாட்' என்னும் கப்பல் இந்த பகுதி வழியாக நியூயார்க்கை அடைய இருந்தது. ஆனால், பெர்முடா முக்கோண பகுதியில் சென்றுகொண்டிருந்த கப்பல் என்ன ஆனது என்பது பற்றி இன்றும் தகவலில்லை.
தொடர்ந்த மர்மங்கள்
அதைத் தொடர்ந்து, 1918 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பார்படாஸ் தீவிலிருந்து கிளம்பிய யூஎஸ்எஸ் சைக்லோப்ஸ் எனும் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் இதே பகுதியில் காணாமல் போனது. அதில் பயணித்த 300 பேர் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. இதேபோல 1945 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 6 விமானங்கள் ஐந்தே பகுதியில் காணாமல் போயின. அதன்பிறகே பெர்முடா முக்கோணம் குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டது.
ஸ்பெஷல் ஆஃபர்
இந்நிலையில், பிரபல சொகுசு கப்பலான நார்வேயின் பிரைமா (Norwegian Prima) அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கிளம்பி பெர்முடா செல்ல இருக்கிறது. இதில் பயணிக்க இருப்பவர்களுக்கு விசேஷ ஆஃபர் ஒன்றையும் அந்த நிறுவனம் அளிக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் தனது இணையதளத்தில்,"ஒருவேளை கப்பல் பெர்முடா முக்கோண பகுதியில் காணாமல்போனால் முழு கட்டண தொகையும் திருப்பியளிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதே கப்பலில் முன்னாள் ராணுவ ஆலோசகர்கள் சிலரும் பயணிக்க இருப்பதாகவும், அவர்கள் பெர்முடா முக்கோணத்தின் அருகே சிறிய படகில் மக்களை அழைத்துச் சென்று அப்பகுதி குறித்து சொல்லக்கூடிய வதந்திகள் குறித்து விளக்கம் அளிக்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
உண்மை என்ன?
பெர்முடா முக்கோண பகுதியில் திசைகாட்டிகள் சரியாக வேலை செய்யாத காரணத்தினால் விமானங்கள் விபத்தை சந்தித்திருப்பதாக கூறுகிறது அமெரிக்க ராணுவம். அதாவது பூமியில் சில இடங்களில் காந்தப்புல வித்தியாசங்கள் இருக்கும். இதனால் திசைகாட்டிகள் சரியாக இயங்காமல் போவதுண்டு. அப்படி பெர்முடா பகுதியிலும் நடப்பதால் இந்த விபத்துகள் நடப்பதாக சொல்கிறார்கள் நிபுணர்கள்.
மேலும், பெர்முடா கடல் பரப்புக்கு அடியே 'தி கல்ஃப் ஸ்ட்ரீம்' எனப்படும் பெருங்கடல் நீரோட்டம் அமைந்துள்ளது. இதனால் இந்தப் பகுதியில் விபத்தை சந்தித்த விமானங்கள் மற்றும் கப்பல்களின் பாகங்கள் இந்த நீராட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர் புவியியலாளர்கள்.
இதனிடையே பெர்முடா முக்கோண பகுதிக்கு செல்ல இருக்கும் சொகுசு கப்பல் அளித்திருக்கும் ஆஃபர் குறித்து நெட்டிசன்கள் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டைட்டானிக்-கு முன்னாடியே கடல்ல மூழ்குன கப்பல்.. அச்சு பிசறாம இன்னும் அப்படியே இருக்கு.. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்..!
- நமக்கு இருக்குற 'ஒரே வழி' அது தான்...! 'அதுல' மட்டும் தான் 'செக்' பண்ண மாட்டாங்க...! கப்பலுக்குள்ள 'ட்ரக்ஸ்' கொண்டு போனது எப்படி...? - வெளிவந்துள்ள 'அதிர' வைக்கும் உண்மைகள்...!
- 'கேப்டன் சூயஸ் கால்வாய் வர போகுது'... 'மீண்டும் இதயத்துடிப்பை எகிற வைத்த 'எவர் கிவன்' கப்பல்'... பரபரப்பு சம்பவம்!
- 'ஹைஜேக்' செய்யப்பட்டதா 'எண்ணெய்' கப்பல்...? 'கொஞ்ச நேரத்துலையே நடந்த டிவிஸ்ட்...' 'குழப்பத்துக்கு மேல் குழப்பம்...' - என்ன தான் நடந்துச்சு...?
- 'ரெண்டே 2 பேர ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி...' 'தங்கத்தை தட்டி தூக்கி...' - கெத்து காட்டும் குட்டி நாடு...!
- VIDEO: நடுக்கடலில் குபுகுபுவென பற்றி எரிந்த கப்பல்!.. தீயை அணைப்பதற்குள் அடுத்த விபரீதம்!.. இலங்கையில் பயங்கரம்
- சும்மா சும்மா 'எங்க ரூட்ல' கிராஸ் பண்றீங்க...! 'இது கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்ல...' - சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை...!
- 'போர் நடந்துச்சுன்னா...' கண்டிப்பா 'நீங்க' தோத்துடுவீங்க...! 'வல்லரசு நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்த சீனா...' - என்ன காரணம்...?
- 'ஒரு அடி நகர முடியாது...' ப்ளீஸ்... அவங்கள விட்ருங்க...! 'அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...' - எவர்கிரீன் கப்பலில் இன்னும் முடியாத பிரச்சனை...!
- சூயஸ் கால்வாயில் சிக்கிய... எவர்கிவன் கப்பலுக்கு கை கொடுத்த 'பங்குனி உத்திரம்'!.. பவுர்ணமியால் உலக வர்த்தகம் காப்பாற்றப்பட்டது எப்படி?