'திடீர்ன்னு கையில கொடுத்துட்டாங்க'... 'குழந்தை பாலுக்கு ஒரே அழுகை'... 'உடனே லேடி Officer மார்போட அணைச்சு'... இப்போ அந்த குழந்தை எங்க?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காபூல் விமான நிலையத்தில், முள் வேலியைத் தாண்டி குழந்தை கொடுக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ராணுவ வீரர் விவரித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தில், முள் வேலியைத் தாண்டி கொடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானியர் ஒருவரின் குழந்தையை ராணுவ வீரர் வாங்கிய சம்பவம் பலரை நெகிழச் செய்தது. தற்போது அன்று நடந்த அந்த சம்பவம் குறித்து அந்த ராணுவ வீரர் விவரித்துள்ளார். அறுவை சிகிச்சை நிபுணரான Lieutenant Colonel Benjamin Caesar, காபூல் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனை ஒன்றில் இராணுவ மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த முள் வேலியைத் தாண்டி மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அந்த நேரம் திடீரென ஒருவர் குழந்தையை மேலே தூக்கி அங்கிருந்த ராணுவ வீரர்களிடம் கொடுத்தார். பிறந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களே ஆன அந்த குழந்தையை அங்கிருந்த பெண் ராணுவ வீரர் ஒருவர் தனது மார்போடு அணைத்துக் கொண்டு பால் கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் தோளில் போட்டுக் கொண்டு நடந்துள்ளார்.

இதனிடையே தனக்குக் குழந்தை பிறந்து 14 மாதங்களே ஆகியுள்ளதால், தன் குழந்தையைக் கவனித்துக்கொண்ட அனுபவம், அந்த ஆப்கானிஸ்தான் குழந்தையைக் கவனித்துக்கொள்ளப் பெரிதும் உதவியதாக Benjamin தெரிவித்துள்ளார். இதற்கிடையே அந்த குழந்தை எங்கே என்ற விவாதம் பரவலாக எழுந்த நிலையில், அந்த குழந்தை அவர்களது பெற்றோருடன் பாதுகாப்பாக உள்ளது என Benjamin தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்