ஏற்கனவே ரொம்ப 'கஷ்டத்துல' இருக்கீங்க... அந்த விஷயத்துல 'அமைதியா' இருக்கணும் இல்லன்னா... 'இந்தியா'வுக்கு பகிரங்க மிரட்டல்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எல்லைப்பிரச்சினை நாளுக்குநாள் உக்கிரம் அடைந்து வரும் நேரத்தில் பகிரங்கமாக இந்தியாவை மிரட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

Advertising
Advertising

இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்சினை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இரு நாடுகளும் தங்களது படைகளை எல்லையில் குவிக்க ஆரம்பித்து இருக்கின்றன. இது தொடர்பாக சமரசம் செய்ய அமெரிக்கா அதிபர் டிரம்ப் வந்தபோது இரண்டு நாடுகளும் அதை வெளிப்படையாக மறுத்து விட்டன.

இந்த நிலையில் சீனா அரசு இந்தியாவை வெளிப்படையாக மிரட்டி இருக்கிறது. இதுதொடர்பாக சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் என்னும் நாளிதழில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், ''தற்போதைய சூழ்நிலையில் இந்தியா மிகக் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடக்கும் பனிப்போரில் இந்தியா நுழையாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் பெரும் சிக்கல் உருவாகும். சமீபத்திய இந்தியா - சீனா எல்லைப் பதற்றத்திலும் இதுவே நடந்தது.

சீனா மற்றும் மேற்கு நாட்டுக்கு இடையே நடக்கும் ஒரு புதிய பனிப்போரில் இந்தியா, அமெரிக்கா பக்கம் சாய்ந்தாலோ அல்லது அமெரிக்காவின் ஒரு சிப்பாயாகச் செயல்பட்டாலோ ஆசியாவின் இரு அண்டை நாடுகளுக்கும் இடையான பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் பேரழிவைச் சந்திக்கும். அதிலும் இந்தியா ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில்தான் உள்ளது. இந்த நேரத்தில் மேலும் பல பொருளாதார இழப்புகளைச் சந்திக்க நேரிடும். சீனா-அமெரிக்கா போரில் தலையிடுவதால் இந்தியாவுக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் இழப்பதற்கு நிறைய உள்ளது.

இந்தியாவில் ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யவும், பொருளாதார மீட்சிக்கு உதவவும் சீனா தயாராக உள்ளது,'' என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வெளிப்படையாக வெளியான இந்த செய்தி உலகம் முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்