"உங்க வயசுல நான் இதான் செஞ்சேன்".. Behindwoods கோல்டு மெடல் விருது விழாவில் உலகப்புகழ் கால்பந்து வீரர் டேவிட் பெக்கமின் தன்னம்பிக்கை பேச்சு.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

திரைப்படத் துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மரியாதைக்குரிய Behindwoods gold medals விருதுகள்,  சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) வழங்கும் விழாக்களும் ஏகோபித்த நன்மதிப்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது 8வது Behindwoods Gold Medals விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நிகழ்ந்தது.

Advertising
>
Advertising

சுமார் 25,000 பார்வையாளர்கள் பங்கேற்ற இந்த 8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள Island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடந்தது.

இந்த விருது நிகழ்வில் கோல்டன் குளோபல் ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேசன் (Golden Golabal Icon of Inspiration) விருதினை உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் பெற்றார். அவரை கௌரவப்படுத்திய தருணத்தில் இணையவழியில் வந்த டேவிட் பெக்கம் தம்முடைய நெகிழ்ச்சியை பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் பகிர்ந்தார். அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டபோது அவற்றுக்கும் அவர் பதில் அளித்திருந்தார்.

அதில் அவர் கூறியதாவது:- 

அனைவருக்கும் வணக்கம் நான் டேவிட் பெக்கெம்..

Behindwoods Gold Medal விருதைப் பெறுவது எனக்கு நம்பமுடியாத பெருமை. முதலாவதாக, இன்றிரவு இந்த விருதைப் பெறுவதில் நான் எவ்வளவு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என சொல்ல விரும்புகிறேன். உங்களுடன் நேரில் இருக்க முடியாததற்கு வருந்துகிறேன். ஆனால் நான் இப்படி கௌரவப்படுத்தப் பட்டிருப்பது பெருமையாக இருக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், ஏசி மிலன், பிஎஸ்ஜி, கேலக்ஸி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடி, இந்தியாவிலும், உலகம் முழுவதும் பல ரசிகர்களைப் பெற்றுள்ளேன். எனினும் இந்தியாவில் உள்ள ரசிகர்களிடம் பேசும் போதெல்லாம், அவர்களின் அளவில்லாத அன்பை கண்டிருக்கிறேன்.

கேள்வி:- இந்தியாவின் மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? இந்திய மக்கள், கலாச்சாரம் மற்றும் உணவு பற்றி.?

டேவிட் பெக்கெம்: உலகெங்கிலும் உள்ள சில அற்புதமான நாடுகள், அற்புதமான நகரங்களுக்குச் செல்ல நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளேன், ஆனால் இந்தியாவுக்குச் சென்றதில்லை. எனவே நான் உண்மையிலேயே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், இந்திய கலாச்சாரத்தை பழகி, இந்திய மக்களை & ரசிகர்களைச் சந்தித்து மற்றும் இந்திய உணவை உண்பது உள்ளிட்டவை தான். ஏனென்றால் நான் இந்திய உணவை விரும்புகிறேன், அதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை.!

கேள்வி: இந்தியாவின் இளம் கால்பந்து வீரர்களுக்கு சில வார்த்தைகள்.?, அவர்களின் வாழ்க்கையில் பெருமை அடைய பயனுள்ள குறிப்புகளைப் பகிர முடியுமா?

டேவிட் பெக்கெம்:  இளம் வயதினருக்கும் கனவுகளுடன் வளரும் எவருக்கும் எனது அறிவுரை, உங்களை நம்புங்கள். ஏனென்றால், நான் உங்கள் வயதில் அதைத்தான் செய்தேன். நான் இளமையில், தொழில் ரீதியாகவே கால்பந்து விளையாட விரும்பினேன். நான் இங்கிலாந்துக்காக விளையாட விரும்பினேன், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாட விரும்பினேன். நான் என்னை நம்பி கடினமாக உழைத்ததால் இப்போது என் கனவுகள் நனவாகின. நீங்களும் உங்களை நம்ப வேண்டும். செய்வதை விரும்பி செய்ய வேண்டும்!

இந்தியாவில் உள்ள எனது ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி. கடந்த 2 வருடங்கள் இந்தியாவிற்கு எவ்வளவு சவாலானவை அறிவேன். மேலும் இந்திய மக்களின் வலிமை மற்றும் எதிர்கொள்ளும் திறனுக்கும் நான் மரியாதை செலுத்த விரும்புகிறேன். ஒரு தேசமாக உங்களது நேர்மறை எண்ணம் மற்றும் ஆற்றல் ஊக்கமளிக்கிறது. மேலும் இது எதிர்கால சந்ததியினரிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவேன். உங்கள் அனைவருக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சியை வேண்டுகிறேன். விரைவில் உங்களை சந்திக்க எதிர்நோக்குகிறேன். நன்றி மற்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பையும் வாழ்த்துக்களையும் அனுப்புகிறேன்.

CHENNAI, BEHINDWOODS, BEHINDWOODS GOLD MEDAL AWARD, DAVID BECKHAM, BGM 2022, BEHINDWOODS GOLD MEDAL AWARD 2022, GOLDEN ICON OF INSPIRATION AWARD, BEHINDWOODS GOLD MEDAL AWARD 8TH EDITION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்