‘பல வருஷமா ஹாஸ்பிட்டல் வாசலில் பிச்சை’.. திடீர் ‘கோடீஸ்வரி’ ஆன பாட்டிம்மா..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிச்சை எடுக்கும் பெண்ணின் வங்கி கணக்கில் சுமார் 6 கோடி ரூபாய் இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லெபான் நாட்டிலுள்ள சிடான் என்ற நகரத்தில் இருக்கும் மருத்துவமனை வாசலில் ஹஜ் வாஃபா முகமது அவத் என்ற பெண் பிச்சை எடுத்து வந்துள்ளார். நீண்ட காலமாக மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்து வருந்ததால் மருத்துவமனை ஊழியர்களுக்கு இவரை நன்றாக தெரியும். அதனால் அப்பெண்ணுக்கு மருத்துவமனை ஊழியர்கள் தினமும் பிச்சைப் போட்டு சென்றுள்ளனர். இதனை அவர் ஜேடிபி என்ற வங்கியில் சேமித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த வங்கி சமீபத்தில் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பணம் திரும்ப கிடைக்கும் என அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளது. இதனை அடுத்து கடந்த புதன்கிழமை லெபான் மத்திய வங்கியில் இருந்து வாஃபா முகமது அவத்துக்கு இரண்டு காசோலைகள் வந்துள்ளது. அதில் இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 37 லட்ச ரூபாய் இருந்துள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிவித்த மருத்துவமனை செவிலியர் ஒருவர், ‘இவரை பிச்சை எடுப்பவர் என்றே நினைத்து இருந்தோம். வாஃபா 10 வருடமாக மருத்துவமனை வாசலில்தான் பிச்சை எடுத்து வருகிறார். அவரை இங்கு எல்லோருக்கும் நன்றாக தெரியும். அவர் இப்போது கோடீஸ்வரி என்பது ஆச்சரியமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

BEGGAR, LEBANESE, BANK, WOMAN, VIRALPHOTO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்