‘வெயில் நேரத்துல கொஞ்சம் கொரோனா குடிங்க!’.. ‘அட ராமா!.. மொதல்ல இந்த பேர மாத்துங்கப்பா.. ரூ.100 கோடி தர்றோம்!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் உருவாகி, உலகெங்கும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இதே கொரோனாவின் பெயரில் இருக்கும் புகழ் பெற்ற பியர் நிறுவனம் ஒன்று, இந்த கொரோனா வைரஸூடன் பலரும் தங்களது நிறுவனத்தின் பெயரைத் தொடர்புபடுத்தி இணையத்தில் விளையாட்டாக பதிவிட்டு வருவதால் தங்களுடைய நிறுவனத்தின் பெயருக்கும், இந்த வைரஸ்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி  நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது.

இதனிடையே மெக்சிகோவை சேர்ந்த மதுபான விடுதி ஒன்று கொரோனா பியரை கலாய்க்கும் விதமாகவும், தங்கள் கடையில் இருந்த மதுவை விற்பனை செய்யும் விதமாகவும் ‘வெயில் நேரத்தில் கொஞ்சம் கொரோனா குடியுங்கள்’ என்று விளம்பரப்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைக் கண்டு பொறுக்காத கொரோனா பியர் நிறுவனம் பொங்கி எழுந்து மேலும் ஒரு அதிரடி அறிவிப்பை தற்போது தந்துள்ளது.

அதன்படி ‌இந்த வைரஸ்க்கு தற்போது சூட்டப்பட்டுள்ள கொரோனா என்கிற பெயரை மாற்றினால் 70 கோடி ரூபாய் தரத் தயார் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் தங்களுடைய போட்டி நிறுவனங்களின் பெயரை இந்த வைரஸ்க்கு வைத்தால் கூடுதலாக 30 கோடி ரூபாய் சேர்த்து மொத்தம் 100 கோடி ரூபாய் தரத் தயார் என்றும் இந்த நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

லத்தின் மொழியில் கொரோனா என்றால் மலர். மலர் போன்ற தோற்றமுடைய இந்த வைரஸ்க்கு கொரோனா வைரஸ் என பெயர் வைக்கப்பட்டது. மதுவில் இருக்கும் ஆல்கஹால் உடலுக்கு கெடுதல் என்றாலும் கொரோனா அளவுக்கு எங்கள் பியர் கெடுதல் அல்ல என்று இந்த பியர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

CORONAVIRUS, MEXICO, BEER COMPANY, 100 CRORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்