'தவறுதலா பணம் அனுப்பிட்டோம்'- 2 ஆயிரம் பேருக்கு 1,310 கோடி ரூபாயை அனுப்பிய வங்கி..!
முகப்பு > செய்திகள் > உலகம்வங்கி ஒன்று தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் சுமார் 1,310 கோடி ரூபாயை தவறுதலா அனுப்பி உள்ளது.
ஐக்கிய நாடுகளின் வங்கிகளில் ஒன்றான சான்டேண்டர் வங்கி கிறிஸ்துமஸ் தினத்தில் தெரியாமல் தவறுதலாக தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் சுமார் 130 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 1,310 கோடி ரூபாய்) தொகையை செலுத்தி உள்ளது. இந்த மொத்தத் தொகையும் சுமார் 2 ஆயிரம் பேருக்கு 75 ஆயிரம் பணப் பரிவர்த்தனைகளின் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தில் சம்பளம் போடப்பட வேண்டிய வங்கிக் கணக்குகள் மற்றும் தொகை விபரங்கள் முன்னரே ஷெட்யூல் செய்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. ஆனால், தொழில்நுட்ப கோளாறின் காரணமாக ஒவ்வொரு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குக்கும் சுமார் 2 முறை சம்பளம் போடப்பட்டுள்ளது. அந்த வங்கியைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இதுபோல் கூடுதல் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சான்டேண்டர் வங்கி நிர்வாகத்தினர் கூறுகையில், “சில தொழில்நுட்ப சிக்கலின் காரணமான எங்களது கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு பேமண்ட்ஸ் அனைத்தும் 2 முறை பரிவர்த்தனை ஆகியுள்ளது. எங்களது தவறுதான். நாங்கள் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இன்னும் சில நாட்களில் தவறுதலாக பணப் பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மீட்டுவிடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
முதல் பணப் பரிவர்த்தனையை சரியாக செய்த வங்கி 2-வது முறையாக தனது பணத்தையே அனுப்பி தவறு செய்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தில் இந்தத் தவறு நடந்துள்ளது. அங்கு பணியாற்றும் மேலாளர் ஒருவர் கூறுகையில், “முதலில் நான் தான் ஆயிரக்கணக்கான பேருக்கு பணத்தை அனுப்பி இந்தத் தவறை பண்டிகை நாள் அதுவுமாக செய்துவிட்டேன் என நினைத்தேன்.
வேலையில் பெரிய தவறு செய்துவிட்டோம், அவ்வளவுதான் என நினைத்தேன். ஆனால், நான் மட்டும் இல்லை. அது வங்கியின் தொழில்நுட்பக் கோளாறு. எப்படி இழந்த அத்தனைப் பணத்தையும் மீட்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டார்.
“bank error recovery process” என்னும் முறையில் தவறுதலாக இழந்த பணத்தை மீட்டுவிடுவோம் என சான்டேண்டர் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளை அந்த வங்கி தொடங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வங்கி ஏடிஎம் கட்டணம் உயர்ந்தது! லிமிட்-க்கு மேல் எடுத்தாச்சுன்னா எவ்வளவு பிடிப்பாங்க?
- ஏடிஎம்-ல் பணம் எடுக்க உதவி செய்வதாக நம்ப வைத்து.. சின்ன கேப்பில் பெரிய மோசடி செய்த இளைஞர்கள்!
- இவ்வளவு பணமா...? பெரிய 'லாரி' தான் கொண்டு வரணும் போலையே...! - அதிர்ந்து போன அதிகாரிகள்...!
- மாத சம்பளதாரர்கள் சந்திக்க போகும் அதிரடி மாற்றம்.. மத்திய அரசின் புதிய முடிவு
- 250 மயக்க மாத்திரை.. 7 செல்போன்கள்.. ‘சென்னை’ சென்ட்ரலில் சிக்கிய நபர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
- டிவியில் ‘சீரியல்’ பார்த்துக்கொண்டிருந்த பெண்கள்.. திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
- கொஞ்சம் உங்க பையை காட்டுங்க.. என்ன அது பேப்பர்ல சுத்தியிருக்கீங்க..? போலீசாரை அதிர வைத்த பயணி..!
- இந்தியாவில் விரைவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை..? - இன்ப அதிர்ச்சி தரும் தகவல்
- பனாமா பேப்பர்ஸ் வழக்கு: அமலாக்கத்துறை சம்மன்... நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நேரில் ஆஜர்!
- Work from home.. வேலை செய்றவங்களுக்கு மத்திய அரசு கொடுத்த ஷாக்