'ஆசையாக சாப்பிட்ட சிக்கன்'... 'அதுவே எமனாக மாறிய அதிர்ச்சி'... 'சாமர்த்தியமாக வெயிட்டர் செய்த செயல்'... பதைபதைப்பை ஏற்படுத்திய வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிக்கன் சாப்பிட்ட இளைஞருக்கு மூச்சுத் திணறலால் ஏற்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற வெயிட்டர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் North Wales-ல் இருக்கும் இந்திய உணவகமான Bangor Tandoori அந்த பகுதியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது சில இளைஞர்களும் அங்கே ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் அந்த இளைஞர்கள் குழுவிலிருந்த இளைஞர் ஒருவருக்கு  திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர் சிக்கனை சாப்பிட்டுவிட்டு, சரியாக விழுங்காத காரணத்தினால், அந்த இளைஞருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வெயிட்டராக வேலை செய்யும், வங்கதேசத்தைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க Sheakh Rifat என்ற மாணவன், உடனடியாக அவரை, சாப்பிடும் மேஜையிலிருந்து வெளியே அழைத்து, அவரின் வயிற்றின் கீழ்ப் பகுதியை இறுக்கிப் பிடித்து, அதன் பின் மேலும், கீழுமாக அசைத்தார்.

ஒரு கட்டத்தில் இதைக் கண்ட வாடிக்கையாளர்கள், பயந்து போக, ஆனால் மூச்சுத் திணறலால் சிரமப்பட்ட நபரின் வாயிலிருந்து சிக்கன் துண்டு கீழே விழுந்து, அவர் சாதாரண நிலைக்கு வந்தார். இதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் தக்க நேரத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட்டு இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய அந்த மாணவனைப் பாராட்டினார்கள்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் வாடிக்கையாளர்களைக் கவனித்து வந்தேன். அப்போது குறித்த வாடிக்கையாளரிடம் ஏதோ தவறு நடப்பதைக் கண்டேன். ஏனெனில், அவரது முகம் சிவந்து போய், கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அதுமட்டுமின்றி மூச்சுவிடமுடியாமல் சிரமப்பட்டார். இதனால் உடனடியாக அவரை அங்கிருந்து வெளியே இழுத்து, வயிற்றின் பின்புறத்திலிருந்து மிகவும் இறுக்கமாகப் பிடித்து, அவரை அசைத்தேன். சில முயற்சிகளுக்குப் பிறகு கோழி வெளியே வந்த பின் அவர் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கினார்.

அதன் பின் என்னை அவர் கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தார். நான் சிறுவயதில் இருக்கும் போது, என்னுடைய தந்தை என்னை இப்படிச் செய்து தான் காப்பாற்றினார், என்பதால் அதையே நான் இங்குச் செய்தேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்