ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் கைமாறிய குழந்தை... நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் குடும்பத்துடன் இணைப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த போது அந்நாட்டு மக்கள் பலரும் அமெரிக்காவுக்கு தப்பித்துச் செல்ல விமானங்களில் முண்டியடித்தனர். அப்போது தொலைந்த குழந்தை ஒன்று தற்போது தனது குடும்பத்துடன் இணைந்துள்ளது.

Advertising
>
Advertising

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது அந்நாட்டு மக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக அமெரிக்க விமானங்களில் ஏறித் தப்பிக்க குடும்பங்களுடன் வந்தனர். கடைசியாகக் கிளம்பும் அமெரிக்க விமானங்களைப் பிடித்துவிடும் நோக்கில் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவிட்டனர்.

பலரும் விமான இறக்கைகளில் உட்கார்ந்து எல்லாம் பயணித்து பார்க்கும் உலக மக்களின் நெஞ்சங்களைப் பதற வைத்தனர். அப்படித்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தப்பிக்க குடும்பம் ஒன்று விமான நிலையத்துக்கு வந்தது. அந்த குடும்பத்தின் தலைவர் அகமாதி தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் விமானத்தில் ஏற முயற்சித்தார்.

கூட்டம் அதிகமாக முண்டியடித்ததால் கைக்குழந்தை சொஹைல் அகமாதியை அங்கு நின்றிருந்த அமெரிக்க ராணுவ வீரரிடம் கொடுத்தார். 5 அடியில் விமானத்துக்குள் ஏறிவிட்டு குழந்தையை வாங்கிக் கொள்ள நினைத்திருந்தார் அகமாதி. ஆனால், விமானத்துக்குள் ஏறிய பின்னரும் அமெரிக்கா சென்று இறங்கிய பின்னரும் குழந்தையை காணவில்லை.

காபூல் விமான நிலையத்திலேயே குழந்தை கைவிடப்பட்டு இருந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்த ஆப்கான் டாக்ஸி டிரைவர் ஒருவர் குழந்தையை கண்டெடுத்து தனது குழந்தையாக வளர்க்க ஆரம்பித்துவிட்டார். அந்த டாக்ஸி டிரைவர் குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட அதன் மூலமாக அமெரிக்காவில் இருந்து தன் குழந்தையைக் கண்டுபிடித்துவிட்டார் அகமாதி.

ஆப்கனில் இருக்கும் தனது மாமனார் மூலம் தலிபான் போலீஸிடம் புகார் கொடுத்து குழந்தையை அதன் குடும்பத்தார் மீட்டுள்ளனர். விரைவில் அமெரிக்காவில் உள்ள தனது பெற்றோரிடம் குழந்தை சொஹைல் செல்ல உள்ளான்.

POLICE, ஆப்கானிஸ்தான், கைமாறிய குழந்தை, AFGHANISTAN, AFGHAN AIRLIFT, LOST BABY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்