‘ஒன்றரை’ வயது குழந்தைக்கு ‘டயட்’ உணவு.. பெற்றோர் அலட்சியத்தால் நடந்த கொடூரம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெற்றோர் வீகன் (Vegan) எனும் உணவு முறைப்படி உணவளித்ததால் 18 மாத குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.

‘ஒன்றரை’ வயது குழந்தைக்கு ‘டயட்’ உணவு.. பெற்றோர் அலட்சியத்தால் நடந்த கொடூரம்..

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி ஷீலா - ரயான். வீகன் உணவு முறையைப் பின்பற்றும் இந்த தம்பதி அவர்களுடைய 18 மாத ஆண் குழந்தைக்கும் அதே உணவைக் கொடுத்து பழக்கப்படுத்தி வந்துள்ளனர். வீகன் உணவுமுறை என்பது தாவரங்களில் இருந்து கிடைக்கும் பொருட்களை மட்டுமே சாப்பிடுவதாகும். இம்முறையைப் பின்பற்றுபவர்கள் பால் பொருட்களைக் கூட உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அந்தக் குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது. பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தை வயதுக்கேற்ற எடையின்றி, ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்ததாலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் மரணத்திற்கு காரணமான பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இந்த தம்பதிக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களும் உடல் மெலிந்து ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்ததைத் தொடர்ந்து அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

BABY, VEGAN, DIET, US, PARENTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்