ஆமை ஓடு மாதிரி தோல்..நாட்டிலேயே முதல் முறை.. பிறந்த குழந்தையை பார்த்து திகைத்த டாக்டர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்லோவாக்கியா நாட்டில் ஆமை ஓட்டின் தடிமன் போன்ற தோலுடன் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. இதன் காரணமாக அந்தக் குழந்தையினால் சுவாசிக்க முடியாமல் போகவே, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து முகம் மற்றும் உடல் பகுதியில் இருந்த கனமான தோலினை அகற்றியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

Advertising
>
Advertising

உன் ஹஸ்பண்ட் மேரேஜ் ஃபோட்டோ அனுப்புறேன், பாரு.. ஐயோ, இது என்னோடது.. மணமேடையில் வைத்து கைதான மணமக்கள்

ஸ்லோவாக்கியா நாட்டில் வசித்துவரும் நடாலியா - மார்ட்டின் தம்பதிக்கு நான்காவது குழந்தையாக பிறந்திருக்கிறாள் எலிசபெத். மருத்துவ காரணங்களினால் 30 வார கர்ப்பத்தின்போதே, அறுவை சிகிசிச்சை மூலம் பூமிக்கு வந்த எலிசபெத்தைப் பார்த்து டாக்டர்கள் உட்பட அனைவரும் திகைத்துப் போனார்கள். காரணம் எலிசபெத்திற்கு harlequin ichthyosis என்னும் மிகவும் அரிதான மரபணு நோய் தாக்கியிருக்கிறது. இதனால், குழந்தையின் தோல்கள்  8 மிமீ அளவு தடிமனாக இருந்திருக்கின்றன.

பிரசவத்திற்கு முன்பே இந்த குறைபாட்டினை மருத்துவர்களால் பரிசோதிக்க முடியாமல் போயிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எலிசபெத் பிறந்த போது , எலிசபெத் உயிர்  பிழைப்பது மிகவும் கடினம் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் எலிசபெத் இன்று நலமுடன் இருக்கிறாள்.

இமை இல்லை

தோல் மிகவும் தடிமன் ஆனதால், எலிசபெத்தின் கண் இமைகள் அகற்றப்பட்டிருக்கின்றன. மேலும், அவளது கையின் இரண்டு விரல்கள், காலில் நான்கு விரல்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. எலிசபெத்தின் உடல் வெப்பநிலையை சமாளிக்கும் திறனை இழந்திருப்பதால், எலிசபெத்திற்கு வியர்வை வராது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆமை போல..

இதுகுறித்து எலிசபெத்தின் தாய் நடாலியா பேசுகையில்," அவள் பிறந்த உடனேயே தீவிர சிகிசிச்சைப் பிரிவிற்கு கொண்டுசெல்லப்பட்டாள். ஆரம்பத்தில் அவள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என மருத்துவர்கள் சொன்னார்கள். அதிர்ஷ்டவசமாக அவள் பிழைத்துக்கொண்டாள். கடினமான தோலுடன் ஒரு குட்டி ஆமை போல அவள் எனக்குக் கிடைத்தாள். மருத்துவ தொழில்நுட்பத்தின் மகத்தான சாதனையினால் என்னுடைய மகள் இன்று உயிருடன் இருக்கிறாள். மற்ற குழந்தைகளை போல அவளை வளர்த்தெடுப்பதே என்னுடைய ஆசை" என்றார்.

2 வருஷமா மேஜையில் உட்கார்ந்தபடியே.. இப்படி ஒரு காட்சியை யாரும் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது.. மனசாட்சியை உலுக்கும் சம்பவம்

BABY GIRL, BORN, TURTLE SHELL, SKIN, DOCTOR, ஆமை ஓடு, தோல், பிறந்த குழந்தை, டாக்டர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்