‘அப்டியே நிலாவுல மிதக்குற மாதிரி இருக்கு’.. வீட்டுக்கு வந்த ‘தங்கமகள்’.. பிறக்கும்போதே ‘வரலாறு’ படைத்த குழந்தை..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஒரு தம்பதி 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர்கள் டினா-பென் கிப்சன் தம்பதியினர். டினா, சைபர் பாதுகாப்பு பகுப்பாய்வளராக வேலை பார்த்து வருகிறார். பென் கிப்சன் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இந்தநிலையில் கரு தத்தெடுப்பு பற்றி டிவியில் வந்த செய்தி ஒன்றின் மூலம் அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இவர்கள் கரு தத்தெடுப்புக்காக அங்குள்ள தேசிய கரு தான மையத்துக்கு சென்றுள்ளனர். அங்கு பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இப்படி பயன்படுத்தப்படாத 10 லட்சத்துக்கும் அதிகமான கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு இந்த தம்பதி அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானமாக பெற்று அதன் மூலம் ‘எம்மா’ என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைக்கு தற்போது 3 வயதாகிறது.
இந்தநிலையில் அந்த தம்பதியினர் மறுபடியும் கரு தானம் பெற்றுள்ளனர். இந்த கரு 27 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கடந்த அக்டோபர் மாதம் பென் கிப்சன் மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த குழந்தைக்கு அவர்கள் ‘மோலி கிப்சன்’ என பெயர் சூட்டி உள்ளனர்.
அமெரிக்காவில் மிக நீண்டகாலம் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது. இதுபற்றி கூறிய பென் கிப்சன், ‘நாங்கள் நிலவுக்கு மேலே இருப்பது போல சந்தோஷமாக இருக்கிறோம். இப்போது எங்களுக்கு ஒரு மகள் அல்ல, 2 மகள்கள்’ என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '100 சதவிகித பலன் கொடுக்கும் மாடர்னா தடுப்பூசி'... 'எப்போது பயன்பாட்டுக்கு அனுமதி???'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள சிஇஓ!!!'...
- இந்திய ஐடி ஊழியர்களுக்கு ‘குட் நியூஸ்’.. H1B விசா விவகாரம்.. அமெரிக்க நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு..!
- "இந்த தப்பு மட்டும் நடந்துடவே கூடாது... பலரோட உயிருக்கே ஆபத்தாகிடலாம்"... 'தடுப்பூசி விஷயத்தில் FDAவின் முக்கிய எச்சரிக்கை!!!'...
- ‘அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்’!.. கொரோனா வார்டில் ‘கண்கலங்க’ முதியவர் கேட்ட கேள்வி.. நொறுங்கிப் போன மருத்துவர்..!
- ‘நடுக்கடலில் திடீரென ரிப்பேர்’.. மூழ்கிய படகின் உச்சியில் 2 நாட்களாக நின்ற நபர்.. மீனை சாப்பிட்டு உயிர் பிழைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..!
- 'ஒரு வழியாக பயன்பாட்டிற்கு வரும் கொரோனா தடுப்பூசி!!!'... 'தேதியுடன் முக்கிய தகவலை பகிர்ந்த தடுப்பூசி திட்டத்தின் தலைவர்!...
- 'அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே'... 'அதன் தடுப்பூசிக்கு முந்திக்கொள்ளும் நாடு?!!'... 'இந்த வாரத்திலேயே வரவுள்ள ஹேப்பி நியூஸ்!!!'...
- 'ஒன்னு ரெண்டு எடத்துல மட்டுமில்ல'... 'உலகம் முழுதுவமே நடந்த வியத்தகு மாற்றம்?!!... 'கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு இடையில்'... 'நாசா பகிர்ந்த மகிழ்ச்சி தகவல்!!!'...
- 'அடுத்த மாதமே மக்கள் பயன்பாட்டுக்கு வரும் தடுப்பூசி???'... '95% பலன் கொடுக்குது!!!'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!'...
- 'ஒரு வழியா முடிவுக்கு வரும் கொரோனா???'... 'அந்த லிஸ்ட்டுல இந்தியா தான் டாப்ல இருக்கு!!!'... 'வெளியான பெரும் நம்பிக்கை தகவல்!!!'...