சேற்றில் சிக்கிய குட்டி யானை.. ஓடி வந்து உதவிய பெண்.. வெளிய வந்த யானை செய்த வியப்பான காரியம்.. வீடியோ!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்று நாம் சோஷியல் மீடியாவை அதிகம் திறந்தாலே நம்மை சுற்றி பல விதமான செய்திகள் மற்றும் வீடியோக்கள் உலாவுவதை தெரிந்து கொள்ள முடியும்.

Advertising
>
Advertising

Also Read | 200 வருசத்துல முதல் முறை.. மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. அமைச்சர் முன் ஜோராக நடந்த திருமணம்!!..

அப்படி வலம் வரும் வீடியோக்கள் அல்லது செய்திகள், அதிர்ச்சிகரமாகவும், விநோதமாகவும், மனதை நெகிழ வைக்க கூடிய வகையிலும் என வித விதமாக தான் இருக்கும்.

இதில் மனதுக்கு நெருக்கமான வகையில் இருக்கும் வீடியோக்கள் பார்க்கும் போது ஒருவித தாக்கம் தான் மனதில் ஏற்படும். அதிலும் குறிப்பாக, சில விலங்குகள் அல்லது உயிரினங்கள் தொடர்பாக இருக்கும் வீடியோக்களை நாம் இணையத்தில் காணும் போது அவை கூட மனதுக்கு நெருக்கமாக தான் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சாலை ஓரத்தில் ஆழமான சேற்றிற்குள் குட்டி யானை ஒன்று சிக்கிக் கொள்கிறது. அந்த சமயத்தில் அங்கே இருக்கும் பெண் ஒருவர் ஓடி சென்று சேற்றில் சிக்கி கொண்ட யானையை காப்பாற்றும் முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்.

மெல்ல மெல்ல குட்டி யானை மற்றும் அந்த பெண்ணும் ஒரே நேரத்தில் முயற்சி செய்வதால், சேற்றில் சிக்கிய அந்த யானை வெளியேயும் வருகிறது. இறுதியில் தனது தும்பிக்கையை உயர்த்தி அந்த பெண்ணுக்கு நன்றி சொல்வது போலவும் சைகை காட்டுகிறது யானை. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த சுசந்தா நந்தா, "சேற்றில் சிக்கிக் கொண்ட யானையை வெளியே கொண்டு வர அந்த பெண் உதவினார். கடைசியில் அந்த குட்டி யானையும் ஆசீர்வாதம் செய்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள் அதிகம் வைரலாகி வரும் நிலையில், எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் சரிவர தெரியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

 

Also Read | குடிநீர் குழாய்க்காக லஞ்சம் கேட்ட பஞ்சாயத்து தலைவி.. 20 வருஷம் கழிச்சு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

BABY ELEPHANT, STUCK, MUD, WOMAN, HELP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்