'எல்லாம் ஓகேதான்.. அதுக்காக.. WEDDING DRESS-அ இங்கெல்லாமா போட்டுக்கிட்டு போவாங்க?'.. வைரலாகும் ஃபோட்டோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

திருமண ஆடை என்பது விஷேஷம்தான். பொதுவாக திருமணத்தன்று அணியும் ஆடைகளை மணம் செய்துகொள்ளும் தம்பதிகள் பத்திரப்படுத்திக் கொள்வதுண்டு.

அந்த திருமண நாளை நினைத்துப் பார்ப்பதற்கு, திருமண புகைப்படங்கள் எத்தனை முக்கியமானவையோ அப்படித்தான் திருமணத்தன்று அணியக் கூடிய ஆடையும் அவர்களின் எப்போதுமான விருப்ப ஆடையாகவே இருக்கும். ஆனால் அந்த ஆடைகளை மிகவும் அரிதாகவே அணிவர். பொதுவாக மணப்பெண்கள் நம்மூரில் திருமண பட்டுப்புடவைகளை, அதற்கு இணையான இன்னொரு விசேஷத்துக்கு கட்டுவதுண்டு.

ஆனால் ஆஸ்திரேலியாவில் 43 வயதான பெண்மணி ஒருவர் நம்மூர் பண மதிப்பில் ரூ. 86 ஆயிரத்துக்கு வாங்கிய திருமண கவுன் தனக்கு மிகவும் பிடித்தமானது என்பதால் ஜிம்மில் தொடங்கி, காய்கறி மார்க்கெட், விளையாட்டு மைதான, மீன்பிடிக்கும் இடம், ரயில் பயணம் என எல்லா இடங்களுக்கு அந்த ஆடையையே அணிந்து செல்வது வைரலாகி வருகிறது.

இதுபற்றி பேசியுள்ள அந்த பெண்மணி, இந்தியாவிற்கு ஒருமுறை வந்தபோதுதான், தனக்கும் இப்படி திருமண ஆடையை அணிந்துகொண்டு வெளியில் செல்லத் தோன்றியதாகவும், அதன் பிறகு தற்போது ஆஸ்திரேலியாவில் இவ்வாறு இருந்து வருவதாகவும், ஒரு மாதிரியாக பலர் பார்த்தாலும் கூட, மனதுக்கு நெருக்கமான திருமண ஆடையே தனக்கு எப்போதும் விருப்பமானது என்றும் குறிப்பிடுகிறார்.

WOMAN, WEDDING, DRESS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்