'நியூஸ் Live ஓடிட்டு இருக்கு'... 'மேடம், உங்களுக்கு ஒரு போன் கால் வந்திருக்கு'... 'அந்த Voiceயை கேட்டதும் அதிர்ந்த செய்தியாளர்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்பிபிசி தொலைக்காட்சியில் நேரலையில் செய்தி வாசித்து கொண்டிருந்த பெண் செய்தியாளருக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு பெரும் திகிலை ஏற்படுத்தியது.
பிபிசி தொலைக்காட்சியில் ஆஸ்திரேலிய பெண் செய்தியாளரான Yalda Hakim என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு திடீரென வந்துள்ளது. நேரலையில் அந்த அழைப்பை எடுத்த செய்தி வாசிப்பாளர் Yaldaவிடம் நான் தான் Shail Shaheen பேசுகிறேன் எனக் கூறியுள்ளார்.
அந்த பெயரையும், அவரது குரலையும் கேட்ட Yalda Hakim ஒரு நிமிடம் சற்று நடுங்கித் தான் போனார். எதிர்முனையில் பேசியவர், இன்று ஆப்கானை தங்களின் ஆளுகைக்குள் கொண்டுவந்ததோடு, உலகத்தின் பார்வையையே தங்கள் பக்க திருப்பிய தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் Shail Shaheen தான் அது.
உடனே சற்று சுதாரித்து கொண்டு பேசிய Yalda தனது பதற்றத்தையோ அதிர்ச்சியையோ வெளிக்காட்டிக்கொள்ளாமல், சாதாரணமாகப் பேசுவதுபோல், ஓகே, தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் Shail Shaheen நம்முடன் இணைப்பிலிருக்கிறார். சொல்லுங்கள் Shaheen, நான் பேசுகிறது கேட்கிறதா? என்று கேட்க, மறுபக்கம் Shail Shaheen தொடர்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.
ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து யாருக்கும் எந்த குழப்பமும் வேண்டாம், காபூலில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுடைய சொத்துக்களுக்கும் உயிருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் என Shail Shaheen கூறினார். இறுதியில் தனது பதற்றத்தை வெளிக்காட்டாமல் தொடர்ந்து 30 நிமிடங்கள் அவரிடம் சாமர்த்தியமாக பேட்டியே எடுத்துவிட்டார் Yalda,
இதற்கிடையே தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் Shail, குறிப்பாக Yaldaவை அழைக்க ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. Yalda ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். ஒரு குழந்தையாக இருக்கும்போது கடத்தல்காரர்கள் உதவியுடன் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி வந்தது Yaldaவின் குடும்பம்.
அதற்குப்பின், கல்வி கற்று, ஊடகவியலில் பட்டம் பெற்று 2012இல் பிபிசி தொலைக்காட்சியில் இணைந்தார் Yalda. இதனிடையே தாலிபான்களிடமிருந்து வந்த அழைப்பைச் சாமர்த்தியமாகச் சமாளித்த Yaldaவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆப்கான் எப்படி இருக்க போகுதோ'... 'ஜீன்ஸ்க்கு வாய்ப்பே இல்ல'... 'But பெண்கள் இத கண்டிப்பா Follow பண்ணணும்'... தாலிபான்கள் அதிரடி!
- 'தப்பிக்கிறதுக்கு வழியே இல்லயா'?!.. இழுத்து பூட்டப்பட்ட காபூல் விமான நிலையம்!.. நிற்கதியாய் நடுத்தெருவில் நிற்கும் குடும்பங்கள்!!
- நாங்க 'அவர' மலை போல நம்பினோம்...! 'இப்படி கைய விரிச்சிட்டு போவாருன்னு நினைக்கல...' 'அசிங்கமா இருக்கு...' - ஆப்கான் பெண் அமைச்சர் வேதனை...!
- என்ன பண்ணி வச்சுருக்கீங்க...? இது 'எல்லாத்துக்கும்' காரண கர்த்தாவே நீங்க தான்...! 'ஒழுங்கா ராஜினாமா பண்ணிட்டு போங்க...' - டிரம்ப் பாய்ச்சல்...!
- 'எங்க இருந்து இவ்வளவு காசு வருது'... 'விழிபிதுங்க வைக்கும் தாலிபான்களின் சொத்து மதிப்பு'... இதுவரை அமெரிக்கா செலவிட்ட மொத்த தொகை!
- ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர் 'இவர்' தான்!.. தாலிபான்கள் வியூகம்!.. யார் இவர்? பின்னணி என்ன?
- முடியலங்க, ரொம்ப 'வேதனையா' இருக்கு...! 'ப்ளீஸ்... ஏதாச்சும் உடனே பண்ணுங்க...' - மனம் நொந்து பதிவிட்ட மலாலா...!
- 'ஒரே இரவில் தூக்கி எறியப்பட்ட அந்தஸ்து'!.. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனியின்... தற்போதைய நிலை என்ன தெரியுமா?
- "எங்கள பத்தி விஷமத்தனமான பிரச்சாரம் பண்றாங்க"!.. திடீரென ட்விஸ்ட் கொடுத்த தாலிபான்கள்!.. திரைமறைவில் நடப்பது என்ன?
- உங்க மேல வச்சுருக்க 'மரியாதைய' கெடுத்துக்காதீங்க...! 'அவ்ளோ தான் சொல்ல முடியும்...' 'அப்புறம் உங்க தலைவிதி...' - இந்தியாவிற்கு கடும் 'எச்சரிக்கை' விடுத்த தாலிபான்கள்...!