"கல்யாணம் பண்ணிக்கலாமா?".. பரபரப்பா இருந்த நாடாளுமன்றம்.. சட்டுன்னு ப்ரொபோஸ் செஞ்ச MP.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் நாடளுமன்றம் நடைபெற்று கொண்டிருந்த போது எம்பி ஒருவர் தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
காதல்
உலகம் முழுவதிலும் அனைத்து பிரிவினைகளையும் தகர்க்கும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு. இனம், மொழி, மதம், தேசம் என காதல் அத்தனை எல்லைகளையும் கடந்துவிடும். காதலில் இருப்பவர்கள் அதனை வெளிப்படுத்த சரியான தருணத்துக்காக எப்போதும் காத்திருப்பது உண்டு. என்றென்றும் வாழ்வில் நிலைத்திருக்க கூடிய அந்த நிமிடத்தை அழகானதாகவும் தங்களது இணையை கவரும் விதத்திலும் அமைத்துக்கொள்ள பலரும் விருப்பப்படுவது உண்டு. அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எம்பி ஒருவர் நாடாளுமன்றத்திலேயே தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்திருக்கிறார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
நாடாளுமன்ற எம்பி
விக்டோரியா மாகாணத்தை சேர்ந்தவர் நாதன் லாம்பர்ட். தொழிலாளர் கட்சியை சேர்ந்தவரான நாதன் அண்மையில் விக்டோரியா மாகாணத்துக்கான எம்பியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனையடுத்து நாடளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது முதல் உரையை நிகழ்த்தினார் அவர். தனது பேச்சை முடிக்கும் சமயத்தில் அங்கிருந்த தனது காதலி நோவா எர்லிச்சிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.
இதனால் சற்று நேரம் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிர்ந்து போயினர். பின்னர் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். அப்போது பேசிய நாதன்,"நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என நினைக்கிறேன். ஆனால், நான் மோதிரம் கொண்டுவரவில்லை. அது பத்திரமாக இருக்கிறது. இரவு குழந்தைகள் தூங்கிய பின்னர் அதனை கொண்டுவந்து தருகிறேன்" என தெரிவித்தார்.
கிரீன் சிக்னல்
அப்போது அங்கிருந்த நோவா எர்லிச்சும் நாதனின் காதலை ஏற்றுக்கொள்ள, அரங்கத்தில் இருந்தவர்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பினர். கொரோனா சமயத்தில் காதலை வெளிப்படுத்த நினைத்ததாகவும் ஆனால், அப்போது முடியவில்லை எனவும் தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டதாக உணர்வதாகவும் தெரிவித்திருக்கிறார் நாதன்.
Images are subject to © copyright to their respective owners.
ஆஸ்திரேலியாவில் நாடளுமன்றத்தில் காதலை ப்ரொபோஸ் செய்வது இது முதல்முறை அல்ல. முன்னதாக 2017 ஆம் ஆண்டில், எம்.பி டிம் வில்சன், ஒருபால் திருமணத்தைப் பற்றி உரை நிகழ்த்தும்போது, கேலரியில் இருந்து அதனை பார்த்துக் கொண்டிருந்த தனது பார்ட்னர் ரியான் போல்கருக்கு ப்ரொபோஸ் செய்தார். உடனடியாக போல்கரும் ஏற்றுக்கொண்டார். இது அதிகாரப்பூர்வ நாடாளுமன்ற பதிவேட்டில் பதிவும் செய்யப்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஒரு பெண்ணை அவமதிக்கிறார்கள்".. நடிகை குஷ்புவின் ட்வீட்.. வருத்தம் தெரிவித்த MP கனிமொழி.. முழு விவரம்..!
- Ind Vs Ned : விறுவிறுப்பான போட்டிக்கு நடுவே காதல் Propose.. "அவங்க ஓகே சொன்னாங்களா இல்லையா?".. வைரல் வீடியோ!!
- "சிக்கன் சமைக்க மாட்டியா நீ".. கணவன் மனைவி இடையே வந்த தகராறு.. விலக்கிவிட போன பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட சோகம்..
- அம்மா மேலயே புகார்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன குட்டி பையன்.. வீடியோவை பார்த்துட்டு அமைச்சர் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்..!
- குழந்தைகளுக்கு தமிழில் பெயர்.. பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் மா.சுப்ரணியன்.. முழு விபரம்..!
- ரெஸ்டாரண்ட்டில் இருந்த இளைஞர்.. திடீர்ன்னு கைது செஞ்ச போலீஸ்.. அதிர்ந்து போன பெண்.. "கடைசி'ல தான் விஷயமே தெரிஞ்சுருக்கு"
- 5 நாள்ல 4 பேரு.. மொத்த படையையும் களத்துல இறக்குன போலீஸ்.. விசாரணைல இளைஞர் சொன்ன விஷயம்.. எல்லாரும் ஒருநிமிஷம் ஆடிப்போய்ட்டாங்க..!
- "இந்தியா கூட மேட்ச் முடிஞ்சதும்".. காதலி'ய பாக்க போன ஹாங்காங் வீரர்.. அடுத்தடுத்து நடந்த 'Lovely' சம்பவம்!!
- "என் Friend எந்திரிக்கவே இல்ல.. ரூம்ல பாம்பு இருக்கு..சீக்கிரம் வாங்க"..போலீசுக்கு போன் செஞ்ச நபர்.. உண்மையை போட்டு உடைத்த டாக்டர்கள்..!
- "1 கிலோ கொறச்சா 1000 கோடி ஒதுக்குறேன்னு சொன்னாங்க.. இப்போ நான் தான் மிகவும் பணக்கார அமைச்சர்".. சொன்னதை செஞ்சு காட்டிய MP..!