இஸ்ரேல் பெண்ணை விவாகரத்து செய்த ஆஸ்திரேலியர்... 8 ஆயிரம் ஆண்டுகள் தண்டனை கொடுத்த சட்டம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மனைவியை விவாகரத்து செய்த ஆஸ்திரேலியர் ஒருவர் 8 ஆயிரம் ஆண்டுகள் இஸ்ரேல் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.

Advertising
>
Advertising

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நோம் என்பவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேற்பாட்டின் காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு நோமின் மனைவி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு இஸ்ரேல் வந்துவிட்டார்.

குழந்தைகளுக்கு அருகிலேயே இருக்க விரும்பிய நோம், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த 2012-ம் ஆண்டு இஸ்ரேல் கிளம்பிச் சென்றார். அங்கேயே மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் ஆய்வாளர் ஆகப் பணிக்குச் சேர்ந்தார். 2013-ம் ஆண்டு இஸ்ரேல் நீதிமன்றத்தில் நோமின் மனைவி விவாகரத்து வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

இஸ்ரேல் விவாகரத்து சட்டம் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்டது. ஆனால், உலகில் எங்கும் இல்லாத விநோத சட்டமாக நோம், டிசம்பர் 31, 9999-ம் ஆண்டு வரையில் இஸ்ரேல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவு பிறப்பித்துவிட்டது. மேலும், அவரின் 2 குழந்தைகளும் 18 வயது எட்டும் வரையில் அவர்களுக்கான செலவை மாதம் 5,000 இஸ்ரேல் ஷெல்கெள்ஸ் தர வேண்டும் என உத்தரவிட்டது.

இஸ்ரேல் நாட்டுக்கு குழந்தைகளுக்காகச் சென்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நோம், இப்போது அங்கேயே சாகும் வரை வாழும்படி ஆகிவிட்டது. அவரது கடன் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 18.19 கோடி ரூபாய் ஆக அந்த நாட்டில் உள்ளது.

இஸ்ரேலில் விவாகரத்து செய்தால் கணவர் தனது 100 சதவிகித சம்பளத்தையும் மனைவிக்கே தர வேண்டும் என்று எல்லாம் சட்டம் இருக்கிறதாம். நோம் கூறுகையில், “இந்த நாட்டில் உள்ள விநோத சட்டத்தால் நான் மட்டும் இல்லை என்னைப் போல் பல வெளிநாட்டினர் இஸ்ரேலை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

PASSPORT, AUSTRALIAN MAN, ISRAEL, 8, 000 YEARS, DIVORCE LAW, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், 8 ஆயிரம் ஆண்டுகள் தண்டனை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்