நாய், பூனையை செல்லப்பிராணியா வளர்த்து பார்த்திருப்போம்.. ஆனா இவங்க எதை வளர்க்குறாங்கன்னு பாருங்க.. ‘ஷாக்’ ஆன நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவில் குடும்பம் ஒன்று ஒரு ஆண்டுக்கும் மேலாக சிலந்தியை செல்லப்பிராணியாக வளர்த்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இறந்துட்டார்னு மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்ட முதியவர்.. பெட்டியை திறந்த ஊழியருக்கு காத்திருந்த ஷாக்..!

சம்மர் ஸ்டோலர்சிக் (Summer Stolarcyk) என்பவர் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சிலந்தியின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘க்ரே என்பவரின் வீட்டில் இந்த பிராணி வளர்ந்து வருகிறது. அதன் பெயர் சார்லட் (வேட்டையாடும் சிலந்தி). ஆஸ்திரேலியாவில் உள்ள க்ரே குடும்பத்தாரால் வரவேற்க பட்டுள்ளார். இது ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு சென்று பூச்சிகளை உண்பதை சார்லெட் விரும்புவது. இது வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற எட்டுக்கால் தேவதைகளை அணைத்துக்கொள்ளுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படத்தை 5000-க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். மேலும் 1300-க்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவைப் பார்த்த பலரும், ‘இதுபோன்ற பெரிய சிலந்தியை எப்படி வீட்டிற்குள் வளர விடுகிறார்கள்?, நான் ஆஸ்திரேலியாவை விட்டு ஏன் வந்தேன் என்று கேட்பவர்களுக்கு பதில் இதுதான். உங்களுக்குத் தெரியாது. காலை 4 மணிக்கு கண்விழித்தால் இதுபோன்ற டியூட்ஸ் சுவரிலிருந்து முறைத்து பார்க்கும்’ என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிலந்திப்பூச்சி இனங்கள் உள்ளன. இவற்றில் பல விஷத்தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

AUSTRALIAN, AUSTRALIAN FAMILY, SPIDER, HOME, செல்லப்பிராணி, ஆஸ்திரேலியா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்