என்னையா 'டேட்டிங்' கம்பெனி நடத்துறீங்க...? 'ஆறடி' உயரத்துல 'ஆம்பள' கேட்டா... என்ன 'மூட் அவுட்' பண்ணிட்டீங்க...! - கடுப்பான பெண் செய்த 'அதிர்ச்சி' காரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவை சேர்ந்த 36 வயதான எலைன் மூர் என்ற பெண் மருத்துவர் திருமணம் செய்ய வேண்டுமென கடந்த 2019-ம் ஆண்டு சிட்னியில் உள்ள பிரபலமான 'டேட்டிங்' நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது தன் விபரங்களை அந்த டேட்டிங் நிறுவனத்திற்கு அனுப்பி, தன்னுடைய எதிர்பார்ப்புகளையும் கூறி ஒரு ஆணை தேர்வு செய்து கொடுக்குமாறு கோரியுள்ளார்.
அதில் எலைன் மூர் தன் இணையருக்கு இருக்க வேண்டிய தகுதிகளாக குறிப்பிட்டவை, 'எனக்கு ஜோடியாக தேர்வு செய்யப்படுபவர் மருத்துவராகவும், குறிப்பாக ஆஸ்திரேலிய - ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதோடு, அவர், ரோமானிய கத்தோலிக்கராகவும், ஆறு அடி உயரமுள்ளவராகவும் இருக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
இதில், எலைன் தனக்கு இணையராக வரும் இளைஞர் 6 அடி கண்டிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு காரணம் எலைன் குடும்ப ஆண் உறுப்பினர்கள் அனைவரும், ஆறு அடிக்கு மேலாக உள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன், அந்த டேட்டிங் நிறுவனம் எலைனுக்கு, டேவிட் என்ற நபரை தேர்வு செய்து, அவரது தகவல்களை பகிர்ந்துள்ளனர். ஆனால், இதில் டேவிட்டின் உயரத்தை அந்த டேட்டிங் நிறுவனம் கண்டுக்காமல் விட்டுவிட்டது.
டேவிட்டை சந்திக்க சென்ற எலைன், டேவிட் 6 அடிக்கும் குறைவாக இருப்பதை பார்த்து கடுப்பாகியுள்ளார். இதனால் எலைன் மூர், விக்டோரியன் சிவில் மற்றும் அட்மினிஸ்ட்ரேடிவ் ட்ரிப்யூனில், டேட்டிங் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், 'நான் என் புதிய மண வாழ்க்கையை தொடங்க இந்த டேட்டிங் நிறுவனத்தை நம்பினேன். ஆனால், நான் எதிர்பார்த்தபடி ஆண் நண்பரை தேர்வு செய்து தரவில்லை. ஆறு அடிக்கும் குறைவான நபரை எனக்கு தேடி தந்துள்ளனர்.
இதனால் என் நேரம் வீண். என் எதிர்பார்ப்புகளை அந்த நிறுவனம் பூர்த்தி செய்யாமல் ஒருவரை கடமைக்கு அனுப்பியுள்ளனர். டேட்டிங் நிறுவனம் எனக்கு 4,995 டாலர் (ரூ.3.67 லட்சம்) பணத்தை இழப்பீடாக தர வேண்டும். மேலும், அவர்கள் என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும்' எனவும் குறிப்பிடுள்ளார்.
இதுகுறித்து டேட்டிங் நிறுவனம் வழக்கறிஞர் தரப்பில் 'எலைன் மூருடன் உறவு வைத்துக் கொள்ள தயாராக இருந்த டேவிட் என்பவரின் விபரங்களைத்தான், அவருக்கு அனுப்பினோம். சில மாதங்களுக்கு பின் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இப்போது அவர் உயரம் குறைவாக இருப்பதாக கூறுகிறார்' என தெரிவித்துள்ளனர்.
அதை தொடர்ந்து விக்டோரியன் சிவில் மற்றும் அட்மினிஸ்ட்ரேடிவ் ட்ரிப்யூன் உறுப்பினர் டேனியல் கால்வின் அளித்த உத்தரவில், 'எலைன் மூர் தனக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கான தீர்வை தனியார் ஆலோசகரிடம் பெற வேண்டும். இவ்வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விசாரிக்கப்படும்' என முற்றுப்புள்ளி வைக்காமல் தொடரும் ரீதியில் குறிப்பிடுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்னங்க சொல்றீங்க.. இவருக்கா இந்த நிலைமை..! கரும்புள்ளியாக மாறிய ‘சேவாக்’ விவகாரம்.. முன்னாள் ‘சிஎஸ்கே’ வீரரின் பரிதாப நிலை..!
- முட்டி மோதி ஒருவழியா இப்போதான் ‘ஐபிஎல்’ நடக்கப்போகுது.. அதுக்கும் ‘ஆப்பு’ வைத்த ஆஸ்திரேலியா.. சிக்கலில் ஐபிஎல் அணிகள்..!
- பல கிலோமீட்டர் தூரத்துக்கு ‘மாபெரும்’ சிலந்தி வலை.. மிரண்டுபோன மக்கள்.. ஆய்வாளர்கள் சொன்ன காரணம்..!
- அப்போ ‘உலகக்கோப்பை’ வின்னர்.. இப்போ நிலைமையே வேற.. முன்னாள் கிரிக்கெட் வீரரின் ‘பரிதாப’ நிலை..!
- நாம 'அவங்கள' தனியா எதிர்த்தா 'சீன்' ஆயிடும்...! 'எல்லா நாடும் ஒண்ணுக்கூடி எதிர்க்குறது தான் பெஸ்ட்...' - ஆஸ்திரலியா முன்னாள் பிரதமர் கருத்து...!
- 'எப்பா சாமி!.. பிசிசிஐ-க்கு ஒரு பெரிய கும்பிடு'!.. 10 நாட்கள் போராட்டம்!.. நெகிழ்ந்து போன ஆஸ்திரேலிய வீரர்கள்!
- "கோலி சீண்டுவாரு... நான் மட்டும் சும்மா இருக்கணுமா"!?.. "இருந்தாலும் சொல்றேன்"... பழைய பகை மறந்து... டிம் பெய்ன் சொன்ன வார்த்தை!
- ‘பேட்டியில் உண்மையை உளறிய வீரர்’!.. மீண்டும் ‘பூதாகரமாக’ வெடித்த பந்தை சேதப்படுத்திய விவகாரம்.. விசாரணை வலையத்துக்குள் சிக்கும் ‘பெரிய’ தலைகள்..!
- போச்சு!.. இனி அவ்ளோதான்!.. மனசாட்சி இல்லையா?.. எப்போ வீட்டுக்கு போவோம்னு தெரியாத மைக் ஹசி!.. பயங்கரமான லாக்!!
- துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட முன்னாள் ‘கிரிக்கெட்’ வீரர்.. ஆஸ்திரேலியாவில் நடந்த அதிர்ச்சி..!