வசமா வந்து 'இப்படி' சிக்கிட்டோமே...! 'சுற்றி எங்குமே மனுஷ நடமாட்டம் இல்ல...'' திரும்பி எப்படி போறதுன்னும் தெரியல... ' - கடைசியில் நடந்தது என்ன...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவில் காணாமல் போன இரு இளைஞர்கள் ஒரு வாரமாக எந்த உணவும் உட்கொள்ளாமல் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மனித நடமாட்டம் இல்லாத வடக்கு பகுதிக்கு மகேஷ் பேட்ரிக் மற்றும் ஷாஹுன் ஆகிய இருவரும் காரில் சென்றுள்ளனர்.

தீடீரென கார் பழுத்தான நிலையில் திக்குதெரியாத பகுதிக்கு சென்ற இளைஞர்கள் திரும்பி வர வழி தெரியாமல் அங்கேயே இருந்துள்ளனர். மனித நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் தண்ணீர் கூட கிடைக்காதாம்.

இரு இளைஞர்களும் உணவு தேடி பல கிலோமீட்டர் அலைந்து திரிந்ததில் நெடுஞ்சாலையை நோக்கிச் செல்வதற்கு  பதிலாக இருவரும் வெவ்வேறு பாதையில் சென்றுள்ளனர்.

காணாமல் போன இருவரும் ஒரு வார காலமாக தண்ணீர் கூட கிடைக்காத நிலையிலும் உயிர் பிழைத்து வந்துள்ளனர். மகேஷ் பேட்ரிக், ஷாஹுன் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒரு வார கால தேடுதலுக்கு பிறகு அவர்களை கண்டுபிடித்துள்ளனர்.

இரு இளைஞர்களும் ஒரு வாரம் எந்த உணவும் சாப்பிடாத நிலையிலும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதும் ஆச்சரியமான சம்பவமாக பார்க்கப்படுகிறது .

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்