"என் மகள் கூட Dating போணும்ன்னா".. 5 ரூல்ஸ் போட்ட அம்மா.. "அதுலயும் அந்த 2வது பாய்ண்ட் இருக்கே"!!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய காலகட்டத்தில், சமூக வலைத்தளங்கள் பயன்பாடு என்னும் விஷயம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்த வண்ணம் தான் உள்ளன.
இந்த உலகின் மூலை முடுக்கில் என்ன சம்பவம் நடந்தாலும் அது தொடர்பான வீடியோக்கள் அல்லது செய்திகள் உடனடியாக இணையத்தில் வைரலாக தொடங்கும்.
அந்த வகையில், தற்போது இணையத்தை கலக்கும் வீடியோ ஒன்று, மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தை பெற்று வருவதுடன் பலரும் இது தொடர்பான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேட் கிளார்க் என்ற பெண் ஒருவர் டிக் டாக் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய மகளுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆண்களுக்கான ஐந்து நிபந்தனைகள் குறித்து குறிப்பிட்டுள்ளது ஹைலைட்டான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதன் முதல் நிபந்தனையில், மகள் டேட்டிங் செய்ய தயாராகவே இருக்கிறார் என்றும் அவருக்கும் மற்றவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என நினைப்பவர் என்றும் தெரிவித்துளளார்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவதாக "எனக்கும் எனது மகளுக்கும் ஒரே நாளில் தான் பிறந்த நாள். அப்படி இருக்கையில் எனது மகளின் முன்னாள் காதலர், இரண்டு பேருக்கும் பிறந்த நாளன்று பரிசுகளை வழங்குவார். இதனால் எனக்கும் எனது மகளுக்கும் இந்த விஷயத்தில் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்" என்று கேட் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது நிபந்தனையில், ஆறு மாதங்களுக்குள் உங்களது டேட்டிங் வாழ்க்கை தீவிரமாக இருக்கும் வரையில், அதை தாண்டிய உறவு ஏதும் இருக்கக் கூடாது என்றும் அந்த ஆறு மாதங்கள் கழித்து தான் தனது மகளின் காதலனை பார்ப்பேன் என்றும் கேட் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக நான்காவது விதியில் உங்களுடைய டேட்டிங் எந்த அளவில் இருந்தாலும் கிறிஸ்மஸ் தடைபட்டு விடக்கூடாது என நிபந்தனை வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்போது என்ன செய்வதென்ற கேள்வியே என் மகள் என்னிடம் வந்து கேட்க கூடாத வகையில் அவரை பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடைசி நிபந்தனையாக அவரது மகளை டின்னர் சாப்பிட வெளியே அழைத்துச் செல்லக்கூடாது என்றும் அப்படியே அழைத்துச் சென்றாலும் அவள் சாப்பிட்டதற்கான பில்லை அவரிடம் கட்ட சொல்லக் கூடாது என்றும் கேட் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஒரு சில கருத்துக்களை பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டாலும், ஒருசில நிபந்தனைகளில் உடன்படாமல் பலரும் பலவிதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.
எதுவாக இருந்தாலும் தனது மகளை டேட்டிங் செய்வதற்கான நிபந்தனைகளை தாயே அறிவித்த விஷயம், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டக்குனு காரை நிறுத்தி கீழே இறங்கிய பிரதமர் மோடி.. முதியவர் கொடுத்த அன்பு பரிசு.. வைரலாகும் வீடியோ..!
- "பணக்காரங்கனா எல்லோரும் அப்படித்தான் இருக்கணுமா?".. தன்னை விட்டு பிரிந்துபோன மகள் குறித்து எலான் மஸ்க் உருக்கம்.. முழு விபரம்..!
- பாட்டியை கொலை செய்து விட்டு.. 4 மாசமா வீட்டில் வைத்திருந்த இளைஞர்.. அம்மா வேற சப்போர்ட்.. 5 வருசம் கழிச்சு தெரிஞ்ச பின்னணி!!
- தான் பிறந்த கருவிலேயே குழந்தை பெற்றெடுக்க முடிவெடுத்த பெண்?!.. சாத்தியமா? வியக்க வைக்கும் பின்னணி!
- "நான் அப்பா மாதிரி இல்லன்னு".. அம்மா'வ எல்லாரும் சந்தேகப்பட்டாங்க.. 38 வருசம் கழிச்சு தெரிஞ்ச உண்மை காரணம்.. நொறுங்கி போன தாய்
- வலியோடு 2 வருஷம் வெளிநாட்டில்.. பெற்ற மகள்களை முதல்முறை நேரில் பார்த்த தந்தை.. நெகிழ வைக்கும் வீடியோ..!
- "முதல் கல்யாணத்தால வாழ்க்கையே போச்சு".. துவண்டு போன தாய்க்கு மலர்ந்த காதல்.. முன்னின்று திருமணம் நடத்திய மகள்!!
- தன்னோட குழந்தைக்காக அம்மா என்னவேனா செய்வாங்க.. பிரபல தொழிலதிபர் பகிர்ந்த நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..!
- சாப்பிட சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி மகள்.. 10வது படித்த 'கூலி தொழிலாளர்' தந்தையின் அசாத்திய கண்டுபிடிப்பு.!! நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்
- "சூப்பர் மார்க்கெட்டில் இருந்த மனுஷன், திடீர்ன்னு".. வெளிநாட்டில் உயிரிழந்த தந்தை.. CCTV பார்த்து கதறிய தமிழக குடும்பம்.. கண்ணீர் மல்க கோரிக்கை!!