'டெலிவரி ஆன உணவுடன் இருந்த துண்டு பேப்பர்...' - 'அத' படிச்சிட்டு 'ரிவியூ'ல என்ன எழுதினாரு தெரியுமா...?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் சாப்பிடுவதற்காக ஃபெட்டூசின் கார்பனாரா பாஸ்தா என்கிற உணவை அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளார்.
அவருக்கு காய்ச்சல் இருந்த காரணத்தினால் ஓய்வெடுத்த பிறகு அவர் தாமதாக எழுந்துள்ளார். எனவே அந்த ஹோட்டல் மூடுவதற்கு சில நேரம் முன்பு தான் அவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். வெறும் ஆர்டருடன் நிறுத்தாமல், ஒரு மெசேஜையும் அந்த ஹோட்டலுக்கு சேர்த்து அனுப்பியுள்ளார்.
அந்த மெசேஜில், "என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் தூங்கிவிட்டேன். எனவே உங்களிடம் தாமதமாக ஆர்டர் செய்துள்ளேன். ஒருவேளை நீங்கள் ஹோட்டலை மூடப் போகும் நேரம் வந்துவிட்டால் என்னுடைய ஆர்டரை கேன்சல் செய்து விடுங்கள்" என அவர் மெசேஜ் அனுப்பி உள்ளார். அந்த ஹோட்டலில் பணிபுரிபவர்கள் இதை படித்துவிட்டு அவர் ஆர்டர் செய்த பாஸ்தாவுடன், இலவசமாக கார்லிக் பிரட்டை அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அவருக்கு ஒரு சிறிய குறிப்பு ஒன்றை பேப்பரில் எழுதி அந்த ஆர்டருடன் சேர்த்து அனுப்பியுள்ளனர். அந்த குறிப்பில் "உங்களின் அன்பான குறிப்புக்கு நன்றி, தாமதமாக ஆர்டர் செய்ததை நினைத்து வருந்தாதீர்கள், நாங்கள் அதற்காக கவலைப்படவில்லை. நீங்கள் கொஞ்சம் நன்றாக உணர உங்களுக்காக கார்லிக் பிரட்டை இதில் இலவசமாக வைத்துள்ளோம். உங்களைப் போன்றோரின் அன்பான மெசேஜ்கள் எங்களின் நல்ல நாளாக மாறுகின்றன. நன்றி." என்று அந்த சிறிய குறிப்பில் உணவகத்தில் பணிபுரியும் சர்வர் எழுதி அனுப்பியுள்ளார்.
இதை அந்த நபர் படித்து நெகிழ்ந்து போயுள்ளார். மனம் குளிர்ந்து போய் உடனே உணவகத்திற்கு கூகுளில் சென்று 5 ஸ்டார் ரேட்டிங் தந்துள்ளார். மேலும் அதில், "இவர்கள் எனக்காக நான் உடல்நிலை சரியில்லாத போது என் வீட்டிற்கு கார்லிக் பிரட்டை இலவசமாக அனுப்பி வைத்துள்ளனர். கூடுதலாக ஒரு அன்பு குறிப்பையும் இணைத்துள்ளனர்.
இதை வாசித்துவிட்டு அங்கு பணிபுரியும் ஒவ்வொரு நபரின் நெற்றியிலும் எனக்கு முத்தம் கொடுத்தாக வேண்டும் போன்று இருந்தது. மேலும் எனக்காக இவர்கள் கார்பனாரா பாஸ்தாவின் மீது சீஸை வேகவைத்து சேர்த்துள்ளனர்.
இது மிகவும் சுவையாகவும் இருந்தது. எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. இந்த அரசர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்" என review கொடுத்துள்ளார்.
இதை கண்ட அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர்ரெட்டிட் சமூக ஊடகத்தில் அவரின் அந்த ரிவியூவை குறிப்பிட்டு பதிவு ஒன்றை எழுதியுள்ளனர். "இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களின் கடையை மூடுவதற்கு 14 நிமிடங்கள் இருக்கும் முன்பு ஒருவர் உணவை ஆர்டர் செய்தார். அத்துடன் அவர் கனிவான ஒரு மெசேஜை குறிப்பிட்டிருந்தார். நாங்கள் அதை படித்திவிட்டு அவருக்கு ஒரு சிறிய குறிப்பு எழுதினோம் மற்றும் கார்லிக் பிரட்டை இலவசமாக அனுப்பினோம்.
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் அவர் எங்களை பற்றி குறிப்பிட்ட இந்த அன்பான ரிவியூவை பார்த்தேன். எங்களை இது மிகுந்த உற்சாகம் ஆக்கி விட்டது" என்று அங்கு பணிபுரியும் நபர் ரெட்டிட்டில் பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்த கல்ல அறுத்தப்போ 'வெள்ளி மழை' மாதிரி பெஞ்சுது...! '6 வருஷமா வீட்டுக்குள்ள மறைச்சு வச்சிருந்த கல்...' - 'உண்மை' தெரிஞ்சு அதிர்ந்து போன நபர்...!
- ‘இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே’.. ரசிகர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த ஆஸ்திரேலியா..!
- ஓவர்நைட்ல 'மில்லினியர்' ஆன பெண்...! அவங்க பண்ணினது 'வெரி சிம்பிள்' விஷயம்...! - அதிர்ஷ்டம் 'இப்படி' கூடவா ஒருத்தர 'கோடீஸ்வரர்' ஆக்கும்...!
- 'கோவாக்சின்' போட்டவங்க 'எங்க நாட்டுக்கு' வர்றதுல எந்த தடையும் இல்ல...! 'கோரன்டைனும் பண்ண மாட்டோம்...' - 'அதிரடி'யாக அறிவித்த நாடு...!
- வசமா வந்து 'இப்படி' சிக்கிட்டோமே...! 'சுற்றி எங்குமே மனுஷ நடமாட்டம் இல்ல...'' திரும்பி எப்படி போறதுன்னும் தெரியல... ' - கடைசியில் நடந்தது என்ன...?
- '30 வருஷம் போலீஸ் கண்ணுல மண்ண தூவி வாழ்ந்தவரு...' 'திடீர்னு ஒருநாள் வந்து நின்னு...' - 'வாழ்க்கை' ஒரு வட்டம்னு சும்மாவா சொன்னாங்க...!
- 'அப்படி' மட்டும் நடந்துச்சுன்னா... 'அணு' ஆயுத தாக்குதலுக்கு 'முதல்' டார்கெட் 'நீங்க' தான்...! எங்க கிட்டேயே 'பூச்சாண்டி' காட்டுறீங்களா...? - பகிரங்கமாக 'மிரட்டல்' விடுத்த நாடு...!
- ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம்...! நாம எல்லாரும் ஒண்ணா நின்னு நம்ம 'பவர்' என்னனு 'அவங்களுக்கு' காட்டணும்... ! போடப்பட்டுள்ள 'AUKUS' கூட்டுத் திட்டம்...!
- அவ்ளோ 'வெறி' ஆகுது...! எங்க 'முதுகு'ல குத்திட்டீங்க இல்ல...? அப்போ எங்ககிட்ட வந்து 'பேசினதெல்லாம்' சும்மா, அப்படி தானே...? - கடுப்பில் கொந்தளிக்கும் நாடு...!
- என்னையா 'டேட்டிங்' கம்பெனி நடத்துறீங்க...? 'ஆறடி' உயரத்துல 'ஆம்பள' கேட்டா... என்ன 'மூட் அவுட்' பண்ணிட்டீங்க...! - கடுப்பான பெண் செய்த 'அதிர்ச்சி' காரியம்...!