என் நண்பன எப்படியாச்சும் காப்பத்திடணுமே...! 'கொஞ்சம் விட்டிருந்தா என்ன நடந்திருக்கும்னு யோசிக்கவே முடியல...' - கரெக்டான நேரத்துல கிளி செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்தான் வளர்த்த பச்சைக் கிளியின் உதவியால் தீவிபத்தில் இருந்து தப்பியுள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்டன்.
ஆஸ்திரேலியாவின், க்வீன்ஸ்லாண்ட் மாகாணத்தின் பிரிஸ்பன் நகரில் வசித்துவருகிறார் ஆண்டன் க்யுயென் (Anton Nguyen). தனியாக வாழும் ஆண்டன் தன் வீட்டில் கிளி ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் ஆண்டன் உறங்கிக்கொண்டிருந்த போது அவருடைய வீட்டின் பின்புறம் பற்றி எரியத்தொடங்கியுள்ளது. ஆண்டன் தன் வீட்டில் புகையை கண்டுபிடித்து எச்சரிக்கும் இயந்திரங்கள் பொருத்தியிருந்தாலும், அவை எச்சரிக்கை அலாரம் அடிப்பதற்கு முன்னரே அவர் வளர்த்து வந்த எரிக் (பச்சைக் கிளி) அலறி தன் நண்பனை எழுப்பியுள்ளது.
அதன்பின்னரே ஆண்டனுக்கு வீடு தீப்பற்றியது தெரியவந்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய ஆன்டன் க்யுயென் 'ஏதோ ஒரு வெடி சத்தத்தைக் கேட்டேன். அதிலிருந்து என் நண்பன் எரிக் (பச்சைக் கிளி) தொடர்ந்து அலறிக் கொண்டே இருந்தான், எனவே எழுந்து பார்த்தால், புகை வாடை வந்தது. உடனடியாக எரிக்கை கையோடு எடுத்துக் கொண்டு, வீட்டின் பின் புறத்தைப் பார்த்தால் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது. அதன்பின் நானும் எரிக்கும் வெளியேவந்து தீயணைப்புத் துறைக்கு புகார் அளித்தோம் எனக்கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்