'தடுப்பூசி சோதனைக்குப்பின்'... 'சிலருக்கு HIV பாசிட்டிவ்?!!'... 'ஷாக் கொடுத்த போலி முடிவுகளால்'... 'உடனடியாக பரிசோதனையை நிறுத்திய நாடு!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தடுப்பூசி பரிசோதனையின் போது எச்.ஐ.வி. பாசிட்டிவ் என போலியான முடிவுகள் காண்பிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் சிஎஸ்எல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை 216 பேரிடம் நடத்தப்பட்டது. அப்போது  இந்த தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்ட ஆன்டிபாடிஸ் எச்.ஐ.வி. வைரஸ் நோயறிதலில் தோன்றும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அந்த சோதனையில் பங்கேற்றவர்களில் சிலருக்கு எச்.ஐ.வி. பாசிட்டிவ் என போலியான முடிவுகள் காட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த தடுப்படுத்தியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட சோதனைகள் உடனடியாக நிறுத்தப்பட்டதாக பிரதமர் ஸ்காட் மோரிஸ் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்