"இந்த ஆபீஸ் எங்க பாஸ் இருக்கு??.." - ஊழியர்களுக்கு நிறுவனம் கொடுத்த வேற மாறி 'சர்ப்ரைஸ்'..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக, ஒரு நிறுவனத்தில் மிக தீவிரமாக பணிபுரியும் ஊழியர்கள், நடுவே சில தினங்கள் விடுமுறை எடுத்து, எங்காவது சென்று தங்களின் விடுமுறையை கழிக்க வேண்டும் என நினைப்பார்கள்.

Advertising
>
Advertising

Also Read | "அய்யய்யோ, அக்கவுண்ட் நம்பர தப்பா போட்டுட்டேன்.." தவறுதலாக போன 7 லட்சம் ரூபாய்.. "கடைசி'ல நடந்தது தான் ஹைலைட்டே.."

ஆனால், அப்படி ஒரு விடுமுறையை ஒரு நிறுவனமே முன்னெடுத்து நடத்தினால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட சம்பவம் தான், சிட்னியை மையமாக கொண்ட மார்க்கெட்டிங் நிறுவனம் செய்து காட்டி உள்ளது.

இந்த நிறுவனம் தனது ஊழியர்களை இரண்டு வார விடுமுறையுடன் கூடி வேலை செய்வதற்காக பாலிக்கு அழைத்துச் சென்றுள்ளது.

வித்தியாசமான வேலை சூழல்

இதற்கான ஊழியர்கள் செலவு முழுவதையும் அந்த நிறுவனமும் ஏற்றுக் கொண்டுள்ளதால், அந்த ஊழியர்களும் எந்த வித கவலையும் இன்றி, தங்களின் விடுமுறையுடன் கூடிய வேலையை செய்துள்ளனர். எப்போதும் இருக்கும், வழக்கமான ஒரு அலுவலக சூழலில் இருந்து ஓய்வு அளித்து, ஒரு வித்தியாசமான வேலை சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக பாலி அழைத்துச் சென்றுள்ளனர். 

மிகவும் பிரபலமான விடுமுறையை கழிக்கும் இடத்தில் இருந்த ஊழியர்கள், தங்களின் வேலைகளுக்கு நடுவே நீச்சல், Snorkeling, Quad பைக் ரைடிங் உள்ளிட்ட பல விதமான வேடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

"இப்படி  ஒரு ஹாலிடேவா??"

அது மட்டுமில்லாமல், இது தொடர்பான வீடியோக்களையும் அந்த நிறுவனம் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் உள்ள காட்சிகளின் படி, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் விடுமுறையை கழித்த படியே தங்களின் வேலைகளையும் பார்த்து வருகின்றனர். அதே போல, நடுவே ஒரு பெண்ணின் பிறந்தநாளை அங்கிருந்த ஊழியர்கள் விடுமுறைக்கு நடுவே கொண்டாடுகின்றனர்.

எப்போதும் அலுவலகத்தில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள், வெளியே இருந்து வேலை செய்யும் போது, நிச்சயம் அனைவருக்கும் இடையே ஒருவித பிணைப்பு அதிகமாகும் என்றும், சிறப்பான ஒரு பாசிட்டிவ் சூழல் உருவாகும் என்றும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே போல, அங்குள்ள ஊழியர்களும் இப்படி ஒரு சிறப்பான விடுமுறை நாளை எனது வாழ்வில் மறக்க மாட்டோம் என்றும்.குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோவை இணையத்தில் பார்க்கும் மற்ற நிறுவனங்களின் ஊழியர்களும் இப்படி ஒரு விடுமுறையை தங்களின் நிறுவனம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

 

Also Read | தென்னந்தோப்பில்.. எரிந்து கிடந்த இளம்பெண்.. இரவில் கணவன் குடும்பம் சேர்ந்து செய்த அதிர்ச்சி காரியம்.. திடுக்கிடும் பின்னணி

AUSTRALIA, AUSTRALIA FIRM, EMPLOYEES, LAVISH HOLIDAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்