"எது, ஒரு செம்மறி ஆட்டின் விலை இம்புட்டு கோடியா?".. பிரமிக்க வைத்த பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்இணையத்தில் அவ்வப்போது வெளியாகும் சில செய்திகள் நம்மை ஒருவித வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கும்.
Also Read | எலான் மஸ்க்கின் Tweet-ல் இருந்த வார்த்தை.. உலகமே அத பத்திதான் பேசிட்டு இருக்கு... குஷியில் நெட்டிசன்கள்..!
அந்த வகையில், செம்மறி ஆடு ஒன்று 2 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலியாவில் விற்பனையான செய்தி, கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த எலைட் ஆஸ்திரேலியன் ஒயிட் சிண்டிகேட் என்ற நான்கு பேர் கொண்ட குழு ஒன்று உள்ளது.
இவர்கள் அனைவரும் இணைந்து தான், ஆஸ்திரேலியன் ஒயிட் ஸ்டட் செம்மறி ஆட்டினை 2 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். ஒரு செம்மறி ஆடை இத்தனை கோடி கொடுத்து வாங்க அதில் என்ன இருக்கிறது என தோன்றலாம். ஆனால், 2 கோடி ரூபாய் வரை விலை போனதற்கான காரணமும் கூட, கடும் ஆச்சரியத்தை தான் பலருக்கும் கொடுத்துள்ளது.
இந்த செம்மறி ஆட்டின் மரபியல் அமைப்பு, மற்ற செம்மறி ஆடுகளை வலுப்படுத்த பயன்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல் இந்த செம்மறி ஆடு அதிக வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட செம்மறி ஆடும் கூட வேகமாக வளர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆடு ஒன்றை இத்தனை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு செம்மறி ஆடு இப்படி ஒரு விலைக்கு போனது, ஆஸ்திரேலியாவில் கம்பளி மற்றும் செம்மறி இறைச்சி தொழில்கள் எந்த உயரத்துக்கு முன்னேறி உள்ளன என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், செம்மறி ஆடுகளின் ரோமங்களை அகற்றும் தொழில் செய்பவர்கள் அங்கே குறைந்து வருவதால், இதற்கான செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, ஆட்டிறைச்சியின் விலையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்