'பீர்ல இருந்து கரண்ட்...' 'அட, இந்த ஐடியா செமயா இருக்கே...' - மொதல்ல 1.5 லிட்டர் பீர வச்சு மின்சாரம் உற்பத்தி...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா ஊரடங்கால் காலாவதியான பீரை பயன்படுத்தி ஆஸ்திரேலியா நிறுவனம் மின்சாரம் தயாரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கால் விற்பனை  ஆகாமலும், காலாவதியான பீரை பயன்படுத்தி 'தி கிளெனெல்க்' என்ற நிறுவனம் மின்சாரம் தயாரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த 'தி கிளெனெல்க்' என்ற கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரமானது ஆஸ்திரேலியாவில் உள்ள மதுபான விடுதிகள், உணவகங்கள் போன்றவற்றிக்கு  பயன்படும் வகையில் உள்ளது.

மேலும் இதுகுறித்து கூறும் 'தி கிளெனெல்க்' நிறுவனத்தினர், பொதுவாக ஒரு லிட்டர் பீர் தயாரிக்க 4 லிட்டர் தண்ணீர் தேவைப்படும், மேலும் இதுவரை தயாரித்த பீர் ஒப்பிடும் போது நிறைய தண்ணீர் வீணாகி இருக்கும். இப்போது நாம் காலாவதியான பீரையும் வீணாக்கினால் எங்கள் நாட்டிற்கு தான் நஷ்டம். இதனால் நாங்கள் ஒரு திட்டத்தை தீட்டி, அதிக வெப்ப நிலையில், பீரை கழிவுநீர் கசடுடன் கலந்தோம். இது உயிர் வாயுவை வெளியிடுகிறது. இதன் விளைவாக மின்சாரம் உருவானது.

அது மட்டுமில்லாமல் நாங்கள் வாரத்திற்கு 1.5 லட்சம் லிட்டர் காலாவதி பீரை மறுசுழற்சி செய்து சுமார் 1,200 வீடுகளின் மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்.

நாங்கள் இந்த கொரோனா காலத்தில் மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களிலும் இந்த செயல்முறையை தொடர்ந்து செய்து வருவோம்.' எனக் கூறியுள்ளனர்.

மேலும் இந்த செய்தி அறிந்த பல நாடுகள் ஆஸ்திரேலியாவின் இந்த புதிய முயற்சியை செயல்படுத்த ஆயுத்தமாகி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்