'நீங்க லாக்டவுன் பண்ணுங்க... பண்ணாத போங்க!.. ஆனா எங்கள விட்டுருங்க!'.. உலக நாடுகளுக்கு 'குட் பை' சொன்ன அரசு!.. 2021 வரை "No entry"
முகப்பு > செய்திகள் > உலகம்2020 ஆம் ஆண்டு முடியும்வரை ஆஸ்திரேலியாவில் எல்லைகள் மூடப்படும் என்று அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் அவற்றின் அன்றாடச் செயல்பாடுகளிலிருந்து முற்றிலுமாக முடங்கியுள்ளன. மேலும், கொரோனா பரவலை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் உலக நாடுகள் அனைத்தும் எல்லை மூடலைப் பின்பற்றி வருகின்றன.
இந்தச் சூழலில், ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. எனினும், சில விலக்குகளையும் ஆஸ்திரேலிய அரசு வழங்க உள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வர்த்தகத் துறை அமைச்சர் பிர்மின்கங் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, "வெளிநாடுகளிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி நோய்ப் பரவலைத் தடுத்து வருகிறோம். ஆஸ்திரேலியாவில் எல்லை மூடல் 2020 ஆம் ஆண்டுவரை தொடரும். எனினும் இதிலிருந்து சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸால் 7,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,859 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.
பொதுவெளிகளில் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மட்டுமே தற்போது வரை கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எனக்கு இப்போ கொரோனா இல்ல’!.. குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
- 'பிளாஸ்மா' செல்களில் உள்ள 'Y வடிவ' புரதம்... 'கொரோனா' சிகிச்சையில் 'புரட்சியை' உண்டாக்கும்... 'அமெரிக்க விஞ்ஞானிகளின்' புதிய கண்டுபிடிப்பு...
- 'இந்திய' எல்லைக்குள் 'சீன' ஹெலிகாப்டர்கள்... 'அத்துமீறி' பறப்பது 'அதிகரித்துள்ளது...' 'எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரிப்பு...'
- 'கொரோனாவுக்கு' 5 பவுண்ட் செலவில் 'மருந்து...' 'பிரிட்டன்' விஞ்ஞானிகள் 'கண்டுபிடிப்பு...' இறப்பு விகிதம் '5ல் ஒரு பங்காக' குறைவதாக 'அறிவிப்பு...'
- 'இந்த' 3 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பாதிப்பு... 'தமிழ்நாட்டின்' நிலை என்ன?
- 'இந்த' பகுதிகளில் வசிப்பவர்களுக்கு... நிவாரண தொகையை 'வீடுகளுக்கே' சென்று வழங்க வேண்டும்: தமிழக முதல்வர்
- ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா!.. திருவண்ணாமலையில் தொடர்ந்து அதிகரிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- 'மும்பையில்' மட்டும் '451 கொரோனா' நோயாளிகளின் 'இறப்பு மறைப்பு...' 'பலியானவர்களின்' எண்ணிக்கை 'அதிகம்...' 'வெளியான தகவலால் அதிர்ச்சி...'
- 'இறக்கமற்ற கொரோனா!.. இன்று மட்டும் 49 உயிர்களை பறித்துவிட்டது!'.. தமிழகத்தின் கொரோனா நிலவரம்
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'மிகுந்த வேதனை'... எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 'வீர வணக்கம்!'.. யார் இந்த 'பழனி?'