“இந்த மனுசன் கிட்ட வீரர்கள் எல்லாம் பயப்படுறாய்ங்க!”.. “அவர் கேப்டன்சியில கூலா இருக்காங்க!”.. இந்திய அணி கேப்டன்சி பற்றி ஆஸி வீரரின் ‘அதிரடி’ கருத்து!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் தலைமையின் கீழ் வீரர்கள் பதட்டமாக காணப்படுவதாகவும் அதேநேரத்தில் ரஹானேவின் தலைமையில் வீரர்கள் கூலாக இருப்பதாகவும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் அண்மையில் பல்வேறு கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தொடருக்கு பின்னர் பலதரப்பட்ட கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன. பொதுவாக முன்னணி வீரர்களையே அதிகம் சார்ந்து இருப்பதாக கருதப்படும் இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் முன்னணி வீரர்கள் 8 பேர் இல்லாத போதிலும் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பதிவு செய்து சொந்த நாட்டுக்கு திரும்பியது.

இதேபோல் தோனிக்கு மாற்றாக ரிஷப் பந்த் இந்த தொடரில் முக்கியமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறியப்பட்டதாக பரவலான தகவல்கள் வெளியாகின. இன்னொருபுறம் கேப்டன் பதவி குறித்து விமர்சனங்கள் பெரும் அளவில் பேசப்பட்டு வருகின்றன. கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய பின்னர் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் கோலிதான் கேப்டனாக இருந்து வந்தார். கேப்டன் பொறுப்பில் தனது பணியை சிறப்பாகவே செய்து வந்த கோலி இடையில் தனக்கு குழந்தை பிறக்க இருந்ததால் ஆஸ்திரேலியா தொடரின் முதல் போட்டிக்கு பின் கோலி சொந்த ஊர் திரும்பினார்.

இதனால் துணை கேப்டன் ரஹானே கேப்டன் பதவியை ஏற்றார். முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு சுருண்டு பெரும் தோல்வியை இந்திய அணி சந்தித்த இக்கட்டான சூழ்நிலைக்கு பிறகு பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து ரஹானே தனது கேப்டன்ஷிப்பில் புதுமுக வீரர்களுடன் களமிறங்கி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். அவருடைய இந்த சவாலான பணிக்கு பல்வேறு பாராட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீயின் சகோதரரும் முன்னாள் ஆல்ரவுண்டருமான ஷேன் லீ கோலியின் கேப்டன்சி பற்றி பேசியிருக்கிறார்.

அதில், “எப்போதுமே சிறந்த பேட்ஸ்மேன் தான் கோலி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் அவருடைய கேப்டன்ஷிப்பில் இருக்கும் போது இந்திய வீரர்கள் பயத்துடனும் பதட்டத்துடனும் இருப்பதை உணர முடிகிறது. காரணம் வீரர்களிடம் அதீத புரொபஷனாலாக இருக்க வேண்டும், உடல் அளவில் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்கிற கோலியின் கண்டிப்பும் கறார்த் தன்மையும். அதேநேரம் ரஹானேவின் கேப்டன்ஷிப்பில் இந்திய வீரர்கள் கூலாகவும் ரிலாக்ஸாகவும் இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

ALSO READ:  “முதல்ல எங்க மக்கள் எல்லாருக்கும் கெடைக்கணும்.. அப்றம் தான் மத்த நாடுகளுக்கு!” - தடுப்பூசி விவகாரத்தில் ‘சர்வதேச வர்த்தக அமைச்சர்’ கறார்!

பதவியை கோலி விட்டுக் கொடுப்பாரா என்பது தெரியாது. ஒருவேளை இந்திய அணி தேர்வு குழுவாக நான் இருந்திருந்தால் ரஹானேவை கேப்டன் ஆக்கி இருப்பேன். கோலியை பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்த அறிவுறுத்தி இருப்பேன். ரஹானேவின் கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று நான் நினைக்கிறேன். இதற்கு காலம்தான் பதில் சொல்லும்!” என்று தெரிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்