Push Up-ல் புதிய உலக சாதனை.. யம்மாடி ஒரு மணி நேரத்துல இவ்வளவா? கின்னஸ் சாதனை படைத்த வீரர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவை சேர்ந்த தடகள வீரர் ஒருவர் ஒரு மணிநேரத்தில் அதிக புஷ்-அப் செய்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.
உலகம் முழுவதும் வித்தியாசமான சாதனைகள் மற்றும் நிகழ்வுகளை கண்டறிந்து கவுரவித்து வருகிறது கின்னஸ் நிர்வாகம். அந்த வகையில் ஆஸ்திலரேலியா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சான்றிதழ் அளித்திருக்கிறது கின்னஸ் அமைப்பு. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் டேனியல் ஸ்கெலி. தடகள வீரரான இவர், ஒரு மணி நேரத்தில் 3,182 புஷ் - அப் செய்து புதிய கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு மணிநேரத்தில் 3,054 புஷ் - அப்களை எடுத்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாராட் யங் என்னும் வீரர் கின்னஸ் சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் யங்-கின் சாதனையை தற்போது முறியடித்துள்ளார் டேனியல். ஆனால், இதற்காக அவர் கடந்து வந்த பாதை மிகவும் வலி நிறைந்ததாகும். டேனியல் தனது 12 ஆம் வயதில் ஒரு விபத்தை சந்தித்திருக்கிறார். இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன்பிறகு சிகிச்சைகள் மூலமாக டேனியல் குணமடைந்தாலும் அவருக்கு CRPS (complex regional pain syndrome) எனப்படும் வலி நோய் தாக்கியிருக்கிறது.
வலி நிறைந்த வாழ்க்கை
சாதாரணமாக பேசும்போது கூட, வலியை ஏற்படுத்தக்கூடிய இந்த நோயுடன் போராடி வந்த டேனியல் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சி செய்து வந்திருக்கிறார். தனக்கு ஏற்பட்ட நோய் தாக்குதல் காரணமாக, பல மாதங்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய சூழல் ஏற்பட்டது. சில நேரங்களில் இடது கையில் ஏற்பட்ட வலியினால் அவருக்கு மயக்க ஊசிகளையும் மருத்துவர்கள் அளித்துள்ளனர்.
பயிற்சி
இத்தனை வலிகளுக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியை மட்டும் டேனியல் கைவிடவே இல்லை. தினந்தோறும் கடுமையாக பயிற்சி எடுத்துவந்த டேனியல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது முதல் கின்னஸ் சாதனையை படைத்தார். அதனை தற்போது அவரே முறியடித்து புதிய உலக சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார்.
இதுமட்டும் அல்லாமல் அதிக நேரம் பிளாங் (plank) செய்தும் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் டேனியல். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 9 மணி நேரம் 30நிமிடங்கள் 1 வினாடிகளுக்கு பிளாங் செய்திருக்கிறார் இவர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Hulk தான் இத யூஸ் பண்ணலாம்.. உலகத்தின் மிகப்பெரிய பால் பாயிண்ட் பேனா.. கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்..மிரளவைக்கும் வீடியோ..!
- உலகின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்.. யம்மாடி இவ்வளவு வயசா?
- 6000 கிமீ தூரம்.. 110 நாள் ரன்னிங்.. கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்.. யாருப்பா இந்த சுஃபியா கான்
- எப்படி 85 ஸ்பூனும் உடலோடு ஒட்டி இருக்கு? எந்த பசையும் இல்ல.. காந்த சக்தியும் இல்ல.. வியக்க வைக்கும் சாதனை மனிதன்
- "ஏன் பொண்ணுனா தனியா போக கூடாதா"?.. நீதிமன்றம் வரை சென்று போராடி... வென்று காட்டிய 'அக்னி சிறகு'!.. வியக்கவைக்கும் பின்னணி!
- 'தோள் கொடுக்க தாய் தந்தையர் இல்லை'!.. 'ஓடத் துடிக்கும் கால்களுக்கு ஷூ இல்லை'!.. ஓடி ஓடியே ஒலிம்பிக்-ஐ அடைந்த அசாத்திய கனவு!.. யார் இந்த ரேவதி?
- VIDEO : இன்னும் ஒரு 'step' எடுத்து வெச்சுருந்தா ஜெயிச்சுருக்கலாம்... ஆனாலும் 'ஓடாம' அடுத்து வந்தவர 'ஜெயிக்க' வெச்ச 'Athlete',,.. 'காரணம்' என்ன??
- 'இளமை' துள்ளலும், மகிழ்ச்சியுமாய் ... 'விருது' பெற்ற மூத்த வீராங்கனை ... செஞ்சுரி அடித்தும் 'தளராத' கால்கள் !
- 'நைட் 10.30 மணி இருக்கும்'.. 'ஓட்ட பிரிச்சு வீட்டுக்குள் எறங்கி'.. 'கழுத்த நெரிச்சு'.. மாற்றுத்திறனாளி வீராங்கனை பகீர் குற்றச்சாட்டு!