'2 கட்டமும் வெற்றி, ஆனா'... 'எங்க தப்பு நடந்தது?'... 'தடுப்பூசி சோதனைக்காக வந்த இளைஞர்'... எதிர்பாராமல் நடந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'2 கட்டமும் வெற்றி, ஆனா'... 'எங்க தப்பு நடந்தது?'... 'தடுப்பூசி சோதனைக்காக வந்த இளைஞர்'... எதிர்பாராமல் நடந்த துயரம்!

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் பெரும் நம்பிக்கை உருவான நிலையில், திடீரென பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பிரேசில் நாட்டில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து பிரேசில் அரசோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமோ, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமோ எந்த பதிலும் அளிக்கவில்லை.

AstraZeneca COVID-19 vaccine trial Brazil volunteer dies

28 வயதான அந்த தன்னார்வலர் ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்து வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப் பிரேசில் சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த விவகாரம் குறித்துப் பதிலளிக்கவில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்