"நமக்கெல்லாம் நல்லது நடக்குமா?!".. 'கதவைத் தட்டிய' அதிர்ஷ்டத்தை 'அவநம்பிக்கையால்' காக்க வைத்த தம்பதி!.. கடைசியில் 'இன்ப அதிர்ச்சி கொடுத்த' ஜாக்பாட்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடாவில் தங்களுக்கு அதிர்ஷ்டமே வராது என்று அவ நம்பிக்கையுடன் இருந்த தம்பதிக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

கனடாவின் St. Johns நகரை சேர்ந்த Nicole Parsons மற்றும் Francois-Xavier Morency தம்பதி இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு லாட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில் அதே சமயம் பெரிதாக இவர்களுக்கு இதுவரை பரிசுகள் விழுந்ததில்லை என்பதால் அவநம்பிக்கையுடன் இருந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் Lotto 6/49 jackpot லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளனர். அதன் முடிவுகள் வந்த போது இருவரும் சென்று உடனே பார்க்கவில்லை. ஏனெனில் தங்களுக்கு நல்லது நடக்காது, அதிர்ஷ்டம் எல்லாம் தங்களுக்கு கிடையாது என்கிற அவநம்பிக்கை இருவருக்குமே இருந்துள்ளது.  ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி கடைக்குச் சென்று பார்த்தபோதுதான் நம்ப முடியாத அந்த இந்த இன்ப அதிர்ச்சி இருவருக்கும் காத்திருந்தது. ஏனெனில் இந்த தம்பதியருக்கு லாட்டரியில் 18.2 மில்லியன் டாலர் பரிசு விழுந்து இவர்கள் திடீரென கோடீஸ்வரர்களாகி உள்ளனர்.

இதுகுறித்து இவர்கள் பேசும்பொழுது பரிசு விழுந்ததை தங்களால் நம்ப முடியவில்லை என்றும் இனி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என முடிவெடுத்துள்ளதுடன், தேவைப்படுபவர்களுக்கு அந்த பணிகள் கிடைக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த பரிசு பணத்தை வைத்து குடும்பத்தை கவனித்துக் கொள்வதுடன் Quebec  நகரில் வீடு வாங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்