'தாலிபான்கள் உள்ள நுழைஞ்சிட்டாங்க...' கெடச்ச சின்ன கேப்ல எப்படி 'எஸ்கேப்' ஆனார்...? 'மின்னல் வேகத்தில் போட்ட பிளான்...' - வெளியாகியுள்ள 'பரபரப்பு' தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உள்நாட்டு போரில் தோற்று போனதன் விளைவாக, காரில் பணத்துடன் ஆப்கானில் இருந்து அதிபர் அஷ்ரப் கானி வெளியேறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானின் அதிபராக விளங்கியவர் அஷ்ரப் கானி. தற்போது நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் தாலிபான் தீவிரவாத படை தலைநகர் காபூலையே சுற்றி வளைத்து கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், ஆப்கானில் நடந்த ஆயுதப் போரில் தாலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கான் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆப்கான் அதிபர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கே இருக்கிறார் என்பது தான் அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.

இதுகுறித்து ரஷ்ய தூதரக செய்தித் தொடர்பாளர் நிகிதா கூறும்போது, 'ஆப்கான் அதிபரான அஷ்ரப் கானி, தலைநகரை சுற்றி வளைத்ததற்கு பின், ஆப்கானிஸ்தானிலிருந்து நான்கு காரில் முழுவதும் நிரப்பட்ட பணத்துடன் ஹெலிகாப்டரில் ஏறி ஆப்கானிலிருந்து வெளியேறிவிட்டார்.

அதோடு, அவர் காரில் பணத்தை ஏற்றும்போது இடமில்லாத காரணத்தினால் பல பண நோட்டுகள் தரையில் விழுந்தன' என செய்தி வெளியிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்