உலக அளவில் பிரபலமான வாழைப்பழ கலை படைப்பு.. இப்போ இப்படி ஒரு சிக்கல் வந்துடுச்சாம்.. நீதிபதி சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுவரில் டேப்பால் ஒட்டப்பட்ட வாழைப்பழ படைப்புக்கு உரிமைகோரி இரண்டு பேர் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார்கள். இதில் நீதிபதி வெளியிட்ட கருத்துதான் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற முதல் மனிதர்.. உலகமே வியந்து பார்க்கும் இந்திய பெண் விமானி.. "அப்படி என்னங்க பண்ணாங்க??"

கலை படைப்பு

கலை படைப்புகள் மீதான ஆர்வம் மனிதர்களுக்கு ஆதிகாலம்தொட்டே இருந்து வந்திருக்கிறது. நாளாக நாளாக படைப்புகள் அதிக அர்த்தங்களை உள்ளடக்கியதாக மெருகேறிக்கொண்டே வந்தன. ஒரே படைப்பில் ஏராளமான கருத்துக்களை சுட்டிக்காட்டுவதை கலைஞர்கள் சிறப்பு பாணியாக பின்பற்றி வந்தனர். அதன்பின்னர் உலகத்துக்கு தெரிவிக்க விரும்பும் பொருளை மறைமுகமாக தங்களது படைப்புகளில் கொண்டுவருவதை கலைஞர்கள் மேற்கொள்ள துவங்கினார்கள்.

அப்படி உலகம் முழுவதும் பிரபலமானவர்களுள் ஒருவர் மொரிசியோ கட்டெலன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தன்னுடைய படைப்பான காமெடியனை (Comedian) விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார். சுவரில் ஒரு வாழைப்பழத்தை டேப்பால் ஒட்டியுள்ளார் கட்டெலன். இந்த படைப்பு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் 1,20,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையானது. மேலும், இது புகழ்பெற்ற Art Basel fair  கண்காட்சியிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் இந்த படைப்பு உலக அளவில் கவனத்தை பெற்றது.

வழக்கு

இந்நிலையில், ஜோ மோர்ஃபோர்ட் என்பவர் இந்த வாழைப்பழ படைப்பு தன்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். மேலும் வாழைப்பழத்தை போலவே ஆரஞ்சு பழத்தையும் தான் 2000 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வந்ததாக ஜோ தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்திலும் சரமாரியான கேள்விகளை இவர் எழுப்பியுள்ளார்.

மேலும், கட்டெலன் வெளியிட்ட படைப்பு தன்னுடையதை போலவே இருப்பதாகவும், ஒருவேளை அவர் தன்னுடைய படைப்புகளை சமூக வலை தளங்கள் வழியாக அறிந்திருப்பார் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் ஜோ.

உரிமை

இந்த குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க மாவட்ட நீதிபதி ராபர்ட் என் ஸ்கோலா ஜூனியர் பதிலளிக்கையில், படைப்பை முதலில் கலையாகக் கருத முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  ஜோ தனது வழக்கை தொடரலாம் என நீதிபதி தெரிவித்திருக்கும் அதேவேளையில், அவர் உடனடியாக இந்த படைப்புக்கு உரிமை கோர முடியாது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே இந்த வாழைப்பழ படைப்பு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த படைப்புக்கு உரிமை கோரி இன்னொருவர் நீதிமன்றத்துக்கு சென்றிருப்பது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "அவர்கிட்ட இருந்து இது ஒன்ன மட்டும் கத்துக்கோங்க".. மறைந்த முதலீட்டு ஜாம்பவான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா குறித்து ஆனந்த் மஹிந்திரா உருக்கம்..!

ARTISTS, COURT, FRUIT, BANANA TAPED TO WALL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்