‘லாஸ் ஏஞ்சல்சில் பரவிய தீ’... ‘இடம் இன்றி தவித்த ஹாலிவுட் பிரபலங்கள்’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத் தீயால், ஹாலிவுட்டின் முக்கியப் பிரபலங்கள் உள்பட பலரும் நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறி இருப்பிடம் இன்றி தவித்து வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சோனாமா பகுதியில், பயங்கரமான காட்டுத் தீ கடந்த திங்கட்கிழமை அன்று நள்ளிரவு பற்றியது. பின்னர் காற்றின் வேகத்தால் மளமளவென பரவிய தீ, ஜெட்டி மியூசியம் அருகில் வரை தீ பற்றிக்கொண்டு எரிந்தது. இதையடுத்து அங்கு வசித்து வந்த மக்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில், பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பிரபலங்களின் வீடுகளும் தீக்கு இரையாகின.

காட்டுத் தீ எச்சரிக்கையால் திடீரென நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய பிரபலங்கள், இரவு தங்க இடம் இல்லாமல் தவித்துள்ளனர். பிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரர் லேப்ரான் ஜேம்ஸின், 23 மில்லியன் டாலர் வீடு எரிந்து போயுள்ளது. இதேபோல், பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிஃபோர்னியா மகாணத்தின் முன்னாள் கவர்னரும் ஆன அர்னால்டு ஸ்வாஸ்னேகர், நடு இரவில் வீடு இல்லாமல் வேறு இடத்துக்கு கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

அர்னால்டின் ‘டெர்மினேட்டர்: டார்க் பேட்’ திரைப்படத்தின் பிரிமியர் காட்சி, திங்கட்கிழமை இரவு திரையிடுவதாக இருந்தது. காட்டுத்தீயால் அது ரத்து செய்யப்பட்டது. இதேபோன்று, ஏஜென்ட் ஆஃப் ஷீல்ட் நடிகர் கிளார்க் கிரேக், சன்ஸ் ஆஃப் அனார்ச்சி படத்தின் நடிகர் கர்ட் ஷட்டர், ரியான் பிலிப் உள்ளிட்ட பல பிரபலங்கள், அவர்களது வீட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களது வீடுகளும் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுக்கடங்காத தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.

FIRE, ACCIDENT, LOSANGELS, CALIFORNIA, AMERICA, HOLLYWOOD, CELEBRITIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்