பார்க்க ஏதோ 'வண்டி' மாதிரி இருக்கும்...! 'ஆனா மோசமான ஆளு...' 'வித்தியாசமா ஏதாவது நெனச்சாலே பொட்டுன்னு போட்ரும்...' - கெத்து காட்டும் நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இஸ்ரேல் நிறுவனம் போர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் ரிமோட் மூலம் இயங்கும் ஆயுதம் தாங்கிய ரோபோவை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் அரசிற்கு சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனமான 'ரெக்ஸ் எம்கே11' ஆயுதங்களை எந்திய ரோபோக்களை தயாரித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை (13-09-2021) அறிமுகப்படுத்தப்பட்ட, 4 சக்கரங்களில் இயங்கும் இந்த ரோபோ, போா் நடைபெறும் பகுதியில் ரோந்து செல்ல பயன்படும் எனவும், தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கண்காணித்து துப்பாக்கியால் சுட முடியும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ரோபோ குறித்து ரெக்ஸ் எம்கே-11 நிறுவனத்தின் துணைத் தலைவா் ரனி அவ்னி கூறும்போது, 'எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ரோபோவில் இரு இயந்திரத் துப்பாக்கிகள், கேமராக்கள், சென்ஸாா்களை பொருத்த முடியும்.

அதோடு மட்டுமல்லாமல், போரில் ஈடுபட்டுள்ள படையினருக்காக உளவுத் தகவல்களையும் இந்த ரோபோ சேகரிக்கும். மேலும் போரில் காயமடைந்த வீரா்களை அழைத்துச் செல்லவும், அருகில் உள்ள இலக்குகளைத் தாக்கவும் இந்த ரோபோவால் இயலும்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்