Area 51 : அமெரிக்காவின் மறைக்கப்பட்ட மர்ம பூமி.. யாராலும் நெருங்கக்கூட முடியாது.. அப்படி எதைத்தான் வச்சிருக்காங்க உள்ளே?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் உள்ள ஏரியா 51 என்னும் பகுதி பற்றிய கதைகள், இணைய உலகில் என்றும் சாகா வரம் பெற்றவை. அதற்கு காரணம் அமெரிக்க அரசு அந்த இடம் பற்றி பேச தயங்குவதுதான் என்றும் சொல்லப்படுகிறது.

Advertising
>
Advertising

Also Read | கடைசி ஓவர்ல ஏன் பாண்ட்யா அப்படி பண்ணார்..? தினேஷ் கார்த்திக் அதிருப்தி.. கடுப்பான நெட்டிசன்கள்..!

எது அதிகம் மறைக்கப்படுகிறதோ? அதுதான் அதிகமான மக்களால் பேசப்படும் என்பது எளிமையான உளவியல் கூற்று. உலகத்தின் வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்கா தனது மொத்த விமான படை பயிற்சியையும் இங்கேதான் மேற்கொள்கிறது. ஆனாலும், இந்த இடம் குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை மற்றும் சந்தேகங்களை முன்வைக்கின்றனர். இதற்கு காரணம், அந்த இடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள அதீத பாதுகாப்பு ஏற்பாடுகள். இவ்வளவு பாதுகாப்பை கொண்டிருக்கும் இந்த பகுதிக்குள் அப்படி என்ன தான் இருக்கிறது? இதுதான் இந்த இடம் பற்றிய பல வதந்திகள் தோன்ற காரணமாகவும் இருக்கிறது.

ஏரியா 51

அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் அமைந்திருக்கிறது இந்த ஏரியா 51 பகுதி. இதனருகில் எந்தவித ஹோட்டலோ, பெட்ரோல் நிலையங்களோ அமைக்கப்பட்டதில்லை. வெறும் பாலைவனம் தான். லாஸ் வேகாஸில் இருந்து வரும் நெவாடா செல்லும் வழியில் அமைந்துள்ள இப்பகுதியில், அமெரிக்க விமானப்படையினர் பயிற்சி பெற தளவாடம் அமைக்கப்பட்டதாக கூறுகிறது அந்நாட்டு அரசு. எவ்வித தரைவழி போக்குவரத்தும் இல்லாத இந்த இடத்துக்கு, சிறிய ரக, விமானங்களில் வீரர்கள் பயணித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த பகுதியை சுற்றி பிரம்மாண்ட கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு ரகசிய படையை சேர்ந்த அதிகாரிகள், 24 மணிநேரமும் காவலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிலேயே பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த பகுதியில் செல்போன், கேமராக்கள் போன்றவையும் வேலை செய்யாது எனவும் பரவலாக சொல்லப்படுகிறது.

ஏலியன்களா?

ஏரியா 51-க்குள் ஏலியன்கள் குறித்த முக்கிய தகவல்களை அமெரிக்க அரசு மறைத்து வைத்திருப்பதாகவும், பூமிக்கு வந்த ஏலியன்களின் வாகனங்கள் அங்கே இருப்பதாகவும் பலரும் நம்புகின்றனர். ஆனால், அந்த கருத்தை திட்டவட்டமாக மறுக்கிறது அமெரிக்கா. அப்படியென்றால் உள்ளே என்னதான் இருக்கிறது?

அமெரிக்கா - ரஷ்யா இடையே பனிப்போர் உச்சத்தை அடைந்திருந்த நேரத்தில், இருநாடுகளும் உளவு வேலையில் தீவிரமாக ஈடுபட்டன. அப்போது அமெரிக்காவிற்கு பாதுகாப்பான அதே நேரத்தில் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத இடம் தேவைப்பட்டதாகவும், அதனாலேயே இந்த இடத்தை அமெரிக்கா தேர்ந்தெடுத்ததாகவும் சொல்வோரும் உண்டு.

பாதுகாப்பு

அதற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த இடத்தில் முன்னதாக சுரங்கம் ஒன்று இருந்திருக்கிறது. வெள்ளி மற்றும் ஈயம் அந்த இடத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்டிருக்கிறது. அதுவே இயற்கையான மறைவிடமாக அமைந்துபோக அமெரிக்க ராணுவம் அதனை பயன்படுத்த துவங்கிவிட்டது. ஆனால், அமெரிக்க விமானப்படை இந்த இடத்தில் புதிய ஆயுதங்களை உருவாக்கி அதனை பாதுகாத்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் "ஏரியா 51 பகுதியை முற்றுகையிடுவோம், உள்ளே இருக்கும் ஏலியன்களை சந்திப்போம்" என இணையதளத்தில் அமெரிக்க மக்கள் பேசத் துவங்கினர். அப்போது, அமெரிக்க விமானப்படை கடும் எச்சரிக்கையை வெளியிட்டதோடு, ஏரியா 51 பகுதியில் நுழைவோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தது. இப்படி, அமெரிக்கா பொத்தி, பொத்தி பாதுகாக்கும் அந்த பகுதிக்குள் அப்படி என்னதான் இருக்கிறது? என்ற கேள்வி இன்றும் கேள்வியாகவே இருக்கிறது. அமெரிக்க அரசை பொறுத்தவரையில் அது விமானப்படையின் பயிற்சி தளம். ஆனால், பொதுமக்களுக்கோ மர்மமங்கள் நிறைந்த பகுதி. இதன் காரணமாகவே ஏரியா 51 பற்றி மக்கள் அதிக ஆர்வத்துடன் பேசிவருகின்றனர்.

Also Read | ‘கிரேட் எஸ்கேப் ஆன ரிஷப் பந்த்’.. இல்லன்னா கேப்டனா முதல் மேட்சே மோசமான ரெக்கார்ட்டா மாறியிருக்கும்..!

AREA 51, SECRET PLACE, SECRET PLACE IN AMERICA, ஏரியா 51, அமெரிக்கா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்