மக்கள் யாருமே வசிக்காத நகரம்.. கீழே இருந்த ரகசிய சுரங்க பாதை.. வெளிச்சத்துக்கு வந்த 2000 வருஷ மர்மம்..
முகப்பு > செய்திகள் > உலகம்எகிப்து நாட்டில் சுமார் 2000 ஆண்டு பழமையான சுரங்க பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இது பல்வேறு கேள்விகளை ஆராய்ச்சியாளர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
எகிப்து நாட்டின் பண்டைய நகரங்களில் ஒன்று தபோசிரிஸ் மேக்னா. இது கிமு 280 மற்றும் 270 க்கு இடையில் பார்வோன் டோலமி II பிலடெல்பஸால் நிறுவப்பட்டதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். தற்போது அலெக்ஸ்சாண்ட்ரியா மாகாணத்தில் அமைந்திருக்கும் இந்த பகுதியில் மக்கள் யாரும் வசிப்பது இல்லை. இருப்பினும் வரலாற்றில் ஒருகாலத்தில் கோலோச்சிய நகரமான தபோசிரிஸ் மேக்னாவில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தான் பூமிக்கு அடியே சுரங்க பாதை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கிமு 332 இல் அலெக்சாண்டர் எகிப்தைக் கைப்பற்றி அலெக்ஸாண்டிரியாவை நிறுவிய பிறகு இது ஒரு பெரிய கலாச்சார மற்றும் மத மையமாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஆய்வு செய்ய டாக்டர். கேத்லீன் மார்டினெஸ் தலைமையிலான சான் டொமிங்கோ பல்கலைக்கழகத்தின் எகிப்திய டொமினிகன் தொல்பொருள் குழு களத்தில் இறங்கியது. இதற்கான வேலைகள் நடைபெற்று வந்த வேளையில் தான் 13 மீட்டர் (43 அடி) ஆழத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சுரங்க பாதை 4,800 அடிகள் நீளம் கொண்டதாக தெரிவித்திருக்கும் ஆராச்சியாளர்கள், இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டவையாக இருக்கக்கூடும் என கணித்திருக்கின்றனர். இதில் இன்னொரு சந்தேகமும் எழுந்திருக்கிறது. அதாவது, இந்த சுரங்க பாதை எகிப்தின் பாரோவான கிளியோபாட்ராவின் கல்லறைக்கு செல்லும் வழியாக இருக்கலாம் எனவும் ஆராச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த சுரங்கத்தின் உள்ளே பல பீங்கான் பாத்திரங்கள் மற்றும் பானைகள் அலபாஸ்டரால் செய்யப்பட்ட தலைகள் ஆகியவை கிடைத்திருக்கின்றன. பழங்காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாக இந்த சுரங்க பாதை கைவிடப்பட்டிருக்கலாம் என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும், இதுகுறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த இடம் பற்றிய பல்வேறு தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இதுக்கு மேல தான் இத்தன வருசமா ஹாஸ்பிடல் இருந்துச்சா?".. லீக் ஆன தண்ணி.. என்னடான்னு தோண்டி பாத்தப்போ வெளியே தெரிஞ்ச 132 வருச மர்மம்!!
- ரூ.360 கோடியில் கட்டப்படும் பிரதமருக்கான பிரம்மாண்ட குடியிருப்பு வளாகம்.. 3 இடங்களை இணைக்க சுரங்கப்பாதைகள்.. பிரம்மிக்க வைக்கும் வசதிகள்..!
- 2600 வருஷத்துக்கு முன்னாடியே இதெல்லாம் சாப்பிட்ருக்காங்களா.? பாலைவனத்துல சிக்கிய மர்ம பானை.. அதிர வைக்கும் தகவல்கள்..!
- திடீர்னு கேட்ட சத்தம்.. கடலுக்கடியே உள்ள சுரங்க பாதையில் சிக்கிய மக்கள்.. கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் விவரமே தெரியவந்திருக்கு..!
- சுரங்க பாதையில் சிக்கிய நபர்.. 8 மணி நேரத்துக்கு அப்புறம் மீட்ட 'போலீஸ்'.. "அவரு அங்க எப்படி சிக்குனாருன்னு தெரிஞ்சப்போ ஷாக் ஆயிடுச்சு"
- 2 நாட்டையும் இணைக்கும் பிரம்மாண்ட Tunnel.. போதை ஆசாமிகளை பிடிக்கப்போன அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்..உள்ளே இருந்த பலே டெக்னாலஜி..!
- VIDEO: 'நிலநடுக்கத்த' கவரேஜ் பண்ணிட்டு இருந்தப்போ... 'திடீர்னு லைவ்ல வந்த ஒரு ஆள்...' - 20,000 பேர் நேரடியாக 'லைவ் ஸ்ட்ரீமில்' பார்த்த 'அந்த' காட்சி...!
- ஆறு மாசமா 'நடந்த விஷயத்தை' யார்கிட்டேயும் சொல்லல...! 'எல்லாம் தெரிஞ்சே தான் பண்ணியிருக்காரு...' - பதறிப்போன மருத்துவர்கள்...!
- சட்டமன்ற வளாகத்துக்குள் ‘ரகசிய’ சுரங்கப்பாதை.. என்னது ‘பாதை’ அங்க வரைக்கும் போகுதா..! ஆச்சரியத்தில் உறைந்த அதிகாரிகள்..!
- 'எகிப்து மம்மி'க்குள்ள அப்படி என்ன தான் இருக்கு?... CT ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள்!.. வெளிச்சத்துக்கு வரும் மனித உடலின் ரகசியங்கள்!