கடவுள் மாதிரி வந்து காப்பாத்திய வாட்ச்.. இப்போ புரியுது ஏன் நெறைய பேர் இந்த வாட்சை கட்டுறாங்கன்னு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்சால் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியரித்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

பசி எவ்வளவு கொடுமைன்னு எனக்குத் தெரியும்.. அதுனால தான்.. 10 ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு இலவச உணவளிக்கும் ஹோட்டல் உரிமையாளர்..!

ஸ்மார்ட் வாட்ச்

இன்றைய நவீன உலகில் பலரும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துகின்றனர். நேரம் பார்ப்பதற்கு மட்டுமே வாட்ச் என்ற காலம் மாறிப்போய், உங்கள் உடல் நலன் குறித்து கணக்கெடுத்து, உங்கள் மீது அக்கறை கொள்ளும் இன்றியமையாத ஒரு கருவியாக ஸ்மார்ட் வாட்ச் மாறி இருக்கிறது.

பல வசதிகள்

இதில் செல்போன் அழைப்புகளை எடுத்து பேசலாம், பாட்டு கேட்கலாம், சாலைகளில் செல்லும்போது மேப் பார்த்துக் கொள்ளலாம். ஸ்மார்ட் வாட்ச் கட்டியிருப்பவரின் இதய துடிப்பு, உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவும், தினமும் அவர் எவ்வளவு தூரம் நடக்கிறார் என்பதை காட்டுகிறது. மேலும் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து பல்வேறு தகவல்களை கணக்கெடுத்து வைத்துக் கொள்ளுகிறது. இப்படி உள்ள சுழலில் ஸ்மார்ட் வாட்ச் ஒருவரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

அமெரிக்காவில் எலெக்ட்ரிக் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக வந்த ஆம்புலன்ஸ் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றது. அந்த நபரின் உடலில் பல்ஸ் குறைந்து வருவதை கண்டறிந்த ஆப்பிள் வாட்ச், தானாகவே 911 என்ற எமர்ஜென்சி எண்ணுக்கு டயல் செய்துள்ளது.

சிங்கப்பூர்

இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் ஆம்புலன்ஸின் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முகமது பிட்ரி என்பவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது உடம்பில் பல்ஸ் குறைவதை அறிந்த ஸ்மார்ட் வாட்ச் உடனே போலீசாருக்கு மெசேஜ் அனுப்பி காப்பாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

கழுத்தில் QR code.. செல்போனில் UPI வாலட்.. டிஜிட்டல் யாசகம் பெறும் இந்த மனிதன் யார்?

APPLE WATCH, US, MAN, BIKE, ஆப்பிள் வாட்ச், ஸ்மார்ட் வாட்ச்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்