‘திடீர்னு வந்த அலெர்ட்’.. டாக்டர் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..! எப்படி தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஆப்பிள் வாட்ச் மருத்துவர் ஒருவரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரத்தில் பல நவீன வசதிகள் உள்ளன. அதில் கைக்கடிகாரத்தை அணிந்திருப்பவரின் இதயத்துடிப்பை கண்காணிக்கும் தொழில்நுட்பமும் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணம் வகோவை சேர்ந்த கால்நடை மருத்துவர் ரே எமர்சன் (79) என்பவர் ஆப்பிள் கைக்கடிகாரத்தை பயன்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் அவருக்கு இதயத்துடிப்பு சீராக இல்லாமல் இருந்துள்ளது. இதனை கண்காணித்த ஆப்பிள் கடிகாரம் அதுகுறித்து ரே எமர்சனுக்கு அலெர்ட் செய்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பினால் ஏற்படும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (atrial fibrillation) கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த ரே எமர்சன், தனது உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்சை விலைமதிப்பற்றதாக கருதுவதாக தெரிவித்துள்ளார். இதுபோல் பல சம்பவங்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பல ஆண்டுகளாக மூடியிருந்த’... ‘ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையை’... ‘வாங்கிய பிரபல நிறுவனம்’... ‘திரும்பவும் உற்பத்தி துவக்கம்'!
- ‘முன்பணம் 5 லட்சம்’.. ‘பாக்கி பணம் இன்னும் தரல’! டவரில் ஏறி சுருக்கு கயிறு மாட்டிய முதியவர்..! பரபரப்பு சம்பவம்..!
- ‘சுமார் 4 கிமீ’.. ‘ஒருத்தரும் உதவிக்கு வரல’.. உயிருக்கு போராடியவரை தள்ளுவண்டியில் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்ற அவலம்..!
- 'ஒரே ஒரு செகண்ட்தான்'.. கண் இமைக்கும் நேரத்தில் முதியவர் பார்த்த காரியம்... செய்வதறியாது தவித்துப்போன இன்னொரு முதியவர்!
- ‘நீங்க இப்படியே தான் சர்ஜரி பண்ணீங்களா?’... ‘மாடலின் கிண்டலான கேள்விக்கு’... வைரலான பாண்ட்யாவின் பதில்!
- ‘வைரலாகும் போதை ஆசாமியின்’.. ‘வடிவேலு காமெடி வீடியோ’..
- ‘திடீரென ரோட்டில் மயங்கி விழுந்த முதியவர்’.. ‘உதவிக்கரம் நீட்டிய கலெக்டர்’.. குவியும் பாராட்டுக்கள்..!
- ‘சிந்துவை கல்யாணம் பண்ண போறேன்’ ‘அதுக்கான எல்லாம் தகுதியும் என்கிட்ட இருக்கு’ அதிர வைத்த முதியவர்..!
- ‘தன்னுடன் துள்ளிக் குதித்த 4 வயது தம்பி’... ‘இப்போ ஒட்டு மொத்தத்தையும்’... 'சோகத்திலும் இளம் தாயின் நெஞ்சார்ந்த பதிவு'!
- ‘இனி வெறும் 99 ரூபாய் தான்’.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடி அறிவிப்பால்’.. உற்சாகத்தில் பயனாளர்கள்..