'இந்த 'ஆப்' கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும்...' 'ஆப்பிள், மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய செயலி...' எப்படி தடுக்கும் என விளக்கம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்பிள் மற்றும் கூகுள் இணைந்து கொரொனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற இடங்களை அறியும் வகையிலான ஒரு செயலியை உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த செயலி ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்பட்டு வருவதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஒரு பிரத்யேக செயலியை உருவாக்கி வருவதாகவும், நம் பக்கத்தில் இருக்கும் எந்த நபருக்காவது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் சென்று வந்த இடங்கள் குறித்த முழு விவரங்களும் நமக்கு உடனடியாக கிடைத்து விடும். மேலும் அந்த இடங்களுக்கு போகாத வண்ணம் நமக்கு எச்சரிக்கை அனுப்பும் வகையிலான செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயம் இதில் தனிநபர் சுதந்திரம் பாதிக்காத வகையில் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் அரசுகளுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும் வைரஸ் பரவலை தடுக்க உதவ முடியும் என்று நம்புவதாகவும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்