"சிங்கிளாகவே இருங்க".. இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த எம்பி.. மேட்ரிமோனி நிறுவன தலைவர் போட்ட ட்வீட்.. அதுக்கு அவர் கொடுத்த ரிப்ளை தான் செம்ம..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நாகலாந்து எம்பி ஒருவருடைய திருமணம் பற்றிய ட்வீட் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "நாங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்.. ஆனா".. காதல் தம்பதி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்...பதறிப்போன பெற்றோர்..!

உலக மக்கள் தொகை தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலக மக்கள்தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. இது உலகளாவிய மக்கள்தொகை பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. 1989 இல் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் ஆளும் குழுவால் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. 1987 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி, உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனை எட்டியது. இதனை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, நாகாலாந்தை சேர்ந்த எம்பியான டெம்ஜென் இம்னா அலோங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உலக மக்கள் தொகை குறித்து பதிவு ஒன்றை நேற்று எழுதியிருந்தார். அதில்,"உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, மக்கள்தொகைப் பெருக்கத்தின் பிரச்சினைகளில் விழிப்புணர்வோடு இருப்போம் மற்றும் குழந்தைப் பேறு குறித்த அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்வோம். இல்லையென்றால் என்னைப் போலவே சிங்கிளாக இருந்தும் எதிர்காலத்திற்கு பங்களிப்பு செய்ய முடியும். இன்றே சிங்கிள்-களின் இயக்கத்தில் சேருங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

உதவி

இதனிடையே டெம்ஜென் இம்னா அலோங் கடந்த 10 ஆம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கூகுள் பக்கத்தில் சிலர் டெம்ஜென் இம்னா அலோங்-வின் மனைவி குறித்து தேடியதை குறிப்பிட்டு,"கூகுள் Search என்னை உற்சாகமூட்டுகிறது. நானும் அவரை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். இது நெட்டிசன்களிடையே வைரலாக பரவியது.

இந்நிலையில், இந்த ட்வீட்டை பார்த்த ஷாதி.காம் நிறுவனர் அனுபம் மிட்டல் அதில் கமெண்ட் செய்துள்ளார். அதில்,"இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார் மிட்டல்.

ரிப்ளை

டெம்ஜென் இம்னா அலோங்-ன் ட்விட்டர் பதிவுக்கு ஷாதி.காம் நிறுவனர் அனுபம் மிட்டல் கமெண்ட் செய்திருந்த நிலையில், டெம்ஜென் அதற்கு பதில் அளித்துள்ளார். அதில் தான் சவுகரியமாகவே இருப்பதாகவும் சல்மான் கானின் திருமணம் முதலில் நடைபெற காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது நெட்டிசன்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது

Also Read | "எனக்குன்னு இருந்தது அந்த வீடு மட்டும்தான் இப்போ அதுவும்".. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உருக்கம்..!

ANUPAM MITTAL, NAGALAND, NAGALAND MINISTER, BRIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்