"இதுவரைக்கும் 5 ஆபத்துல இருந்து தப்பிச்சிட்டோம்!.. 6வது ஆபத்துதான் கொரோனா"!.. 'இதுக்கே' இப்படினா.. 'அடுத்ததா விஞ்ஞானிகள்' சொன்னத கேட்டா 'அல்லு வுட்ரும்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நாம் வாழும் நமது இந்த வாழ்நாளிலேயே இன்னொரு கொள்ளை நோய்த்தொற்று வரலாம் என்று நம்புவதாக பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Advertising
Advertising

மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கக் கூடிய வனவிலங்குகள் பற்றி கண்டறியும் ஆய்வை பிரிட்டனில் லிவர்பூ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் முயற்சித்து வரும் நிலையில், லிவர்பூல் பல்கலைக்கழகப் பேராசிரியர் மாத்யூ பேலிஸ் பிபிசிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் நாம் 6 குறிப்பிடத்தக்க ஆபத்துகளை சந்தித்துள்ளதாகவும், சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஏவியான் இன்புளூயன்ஸா மற்றும் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்டவற்றையும் இதற்குள் சந்தித்துள்ளதாகவும் கூறிய  மாத்யூ பேலிஸ், நாம் இதுவரை 5 ஆபத்துகளில் இருந்து தப்பிவிட்டோம். ஆனால் 6வது ஆபத்து நம்மை பிடித்துக் கொண்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், நாம் எதிர்கொள்ளும் கடைசி கொடும் நோய்த் தொற்றாக கொரோனா இருக்கப் போவதில்லை என்றும், மனித இனத்தை நோய்த்தொற்றில் இருந்து காக்கும் பொருட்டு வனவிலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை நாம் கூர்ந்து கவனித்தாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்