'கொரோனா' பேய் தாக்கிய கப்பல்... நடுக்கடலில் தத்தளிக்கும் '3700 பேர்'... மேலும் 10 பேருக்கு 'வைரஸ்' தாக்குதல்...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி நடுக்கடலில் நிறுத்தப்பட்ட டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் மேலும் 10 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஜப்பானில் இருந்து ஹாங்காங் சென்று மீண்டும் ஜப்பான் திரும்பிய டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பயணம் செய்த 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அண்மையில் தெரியவந்தது.
அந்த முதியவர் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவருடன் பயணித்த சக பயணிகளுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்ததால் அந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அந்த கப்பலில் இருக்கும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் 10 பேரும் உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, கப்பலில் உள்ள 3,701 பேரும் 2 வாரங்கள் கப்பலிலேயே தங்கியிருக்க வேண்டுமென ஜப்பான் சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த நிலையில் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் மேலும் 10 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அவர்கள் கனகவா பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கப்பலில் உள்ள அனைவரும் கொரோனா தாக்குதல் பயத்திலேயே நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஐரோப்பாவிலும்' பரவுது புதுவித காய்ச்சல்... 'ஃபிரான்சில்' மட்டும் 26 பேர் பலி... 'மறைக்கும்' உலக நாடுகள்...
- 'ஃபிரீசர்' இறைச்சி 'ஜாக்கிரதை'... 'கொரோனாவின்' வசிப்பிடம் இதுவாகக் கூட இருக்கலாம்... 'சீனாவில்' படித்த 'திருப்பூர் மாணவர்' தகவல்...
- ஒரே நாளில் இத்தனை பேர் 'பலியா?'... 'மிரட்டும் கொரோனா'... அச்சத்தில் 'சீனர்கள்'...
- 'உணவு, தண்ணீர்' இல்லாமல் 'ஒரு வாரமாக' தவித்த 'மாற்றுத்திறனாளி' சிறுவன்... 'கொரோனா' சிகிச்சை முடிந்து திரும்பி வந்த 'தந்தைக்கு' காத்திருந்த 'அதிர்ச்சி'...
- 'மரணம் நிச்சயம்' என்று தெரிந்தே செல்லும் 'மருத்துவர்கள்'... 'சீனர்களின்' அர்ப்பணிப்பு மிகுந்த 'போராட்டம்'... 'கண்ணீருடன்' வழியனுப்பும் 'உறவுகள்'... 'வைரல் வீடியோ'..
- 'ராணுவ' வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட 'ஹுபேய்' நகரம்... மகளை காப்பாற்ற 'போராடிய தாய்'... கல் மனதையும் 'உருக வைக்கும்' கதை
- “எங்களுக்காக இப்படி எங்க நாடு வரலயே?”.. “இந்திய மாணவ நண்பர்களை ஏக்கத்துடன் பார்க்கும் பாகிஸ்தான் மாணவர்கள்!”... உருக்கும் வீடியோ!
- '1000 படுக்கைகள்' கொண்ட 'மருத்துவமனை'... 'ஏழே நாளில்' கட்டி முடித்து 'சீனா சாதனை'... 'வைரலாகும்' சாட்டிலைட் புகைப்படங்கள்...
- 'புடிங்கடா அந்த தங்கத்த'... 'வைரசுடன் தப்பியோடிய நபர்'... இலங்கையில் பரவும் 'பீதி'...
- "தும்முனாலே கொரோனா தானா..." "சமூக விரோதிய பாக்குற மாதிரி பாக்குறாங்க..." "காலம் எப்படி மாறிவிட்டது..." 'அஸ்வினின்' வைரல் 'ட்வீட்'...!