100 காலேஜ் மாணவர்களின் கடன்களை சிங்கிளாக அடைத்த மர்ம நபர்.. இவ்வளவு கோடியை அனுப்பிட்டு பெயரை கூட சொல்லாம போய்ட்டாரே.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவர்களின் கல்விக் கடன்களை மர்ம நபர் ஒருவர் அடைத்த சம்பவம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
கல்விக் கடன்
படிக்கும் காலத்திலேயே, பொருளாதார சுமைகளை சந்திப்பது சவாலான காரியம். எதிர்காலத்தை நோக்கிய திட்டமிடல் உள்ளிட்ட ஒருவரது இலக்குகளுக்கு கல்விக் கடனே தடையாக அமைவதையும் பார்த்திருக்கிறோம். இந்த சூழ்நிலை மாணவர்களிடையே மன அழுத்தத்தை தோற்றுவிக்கும் அபாயமும் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவை சேர்ந்த வில்லி கல்லூரி மாணவர்களுக்கு இந்த கவலை கிடையாது.
இந்த கல்லூரியில் இந்த வருடம் படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக் கடன்களை மர்ம நபர் ஒருவர் அடைத்திருக்கிறார்.
சர்ப்ரைஸ் அறிவிப்பு
அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் பகுதியில் இருக்கிறது இந்த வில்லி காலேஜ். இங்கே இந்த வருடம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியேற இருக்கிறார்கள். இதனிடையே இந்த மாணவர்களுக்கு மொத்தமாக சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் (2.31 கோடி ரூபாய்) கல்விக் கடன் இருந்திருக்கிறது.
இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்த கல்லூரியின் முதல்வர் ஜே. ஃபெல்டன் மேடையில் பேசும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அப்போது அவர்," நீங்கள் கல்லூரிக்கு ஒரு பைசா கூட கடன்பட்டிருக்கவில்லை. உங்களது கடன்கள் மொத்தமாக அடைக்கப்பட்டுவிட்டது" என்றார். இதனால் அங்கு கூடியிருந்த மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
மேலும், மாணவர்களின் மொத்த கடன் தொகையையும் அடைக்க முன்வந்த நபர், தனது பெயரை வெளியிட விரும்பவில்லை எனவும் கல்லூரி முதல்வர் குறிப்பிட்டார். இதுகுறித்து பேசிய மாணவர் ஒருவர்,"என்னுடைய வாழ்க்கையையே இந்த உதவி மாற்றிவிடும். அவருக்கு மிகுந்த நன்றி" என்றார்.
அமெரிக்காவில் 100 மாணவர்களின் கல்விக் கடன்களை அடைத்த நபர் தனது பெயரைக்கூட வெளியிடாத சம்பவம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கிய விமானம் " உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பிய மர்மத்தின் பின்னணி என்ன?
- எல்லாரும் நினைக்கிறமாதிரி ரஷ்யா கருங்கடல்ல போர் கப்பலை மட்டும் நிறுத்தல.. வேற ஒன்னும் செஞ்சிட்டு இருக்காங்க.. குண்டைத் தூக்கிப்போட்ட அமெரிக்கா !
- 4 மாசமா வீட்டுக்குள்ள கேட்ட குறட்டை சத்தம்.. "ஆத்தாடி.. இவ்வளவு நாளா வீட்டுக்குள்ள இதையா வச்சிருந்தீங்க".. ஷாக் ஆன மீட்புப்படை வீரர்கள்..!
- 72 அடி அகலம்.. அமெரிக்காவுல மீண்டும் திறக்கப்பட்ட "நரகத்துக்கான வழி".. திகைக்க வைக்கும் பின்னணி..!
- 13,500 அடி உயரத்துல பறந்தபோது தடுமாறிய பாராசூட்.. கீழே விழுந்தும் உயிர்பிழைச்ச பெண்..உண்மையாவே இது மெடிக்கல் மிராக்கிள் தான்..
- திடீர்னு வானத்துல தோன்றிய வித்தியாசமான மேகம்.. அதிர்ந்துபோன மக்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
- தப்பான லாட்டரி டிக்கெட் வாங்கிட்டோம்னு வருத்தப்பட்ட பெண்.. ஆனா கடைசில நடந்த ட்விஸ்ட்..!
- அமெரிக்காவில் வரவிருக்கும் புதிய சட்டம்.. மகிழ்ச்சியில் இந்தியர்கள்.. முழுவிபரம்..!
- அதிர்ஷ்டம்-னா அது இதுதான்.. சூறாவளியில் சிக்கி சிதைந்த காரிலிருந்து தப்பித்த இளைஞர்.. வைரல் வீடியோ..!
- நீங்க வாங்குனா மட்டும் போதும்.. வீட்டை ஃப்ரீயா கொடுத்து 22 லட்சம் பணமும் கொடுக்கும் நிறுவனம்.. ஓஹோ இதுதான் காரணமா?