'அமெரிக்காவை கிண்டல் செய்து சீனா வெளியிட்ட வீடியோ...' சுதந்திர சிலைக்கே கொரோனாவா? நாங்க மொதல்லயே சொன்னோம்ல, கேட்டீங்களா அமெரிக்கா...?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்க அரசு எவ்வாறு செயல்பட்டது என அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது சீன அரசு.
தற்போது உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும், கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து மனிதர்களுக்கு பரவ தொடங்கி தற்போது நாடு முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவிய நாள் முதற்கொண்டு அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் வார்த்தைகளால் ஒரு பனி போரே நடக்கிறது என சொல்லலாம். அமெரிக்காவில் ஏற்படும் பலி எண்ணிக்கையே கொரோனா பரவிய விதத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இந்நிலையில் சீனாவில், அமெரிக்கா கொரோனா வைரஸ் விவகாரத்தில் எவ்வாறு செயல்பட்டு என்பதை பற்றி பகடி செய்யும் விதமாக ஒரு அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ஒரு பக்கத்தில் சீனாவின் பக்கம் கரோனா போராளிகள், மருத்துவப் பணியாளர்களைக் குறிக்கும் முகக்கவசங்கள் அணிந்த ஒரு பொம்மையும், மறுபக்கத்தில் அமெரிக்காவின் சுதந்திர சிலையும் பேசிக்கொள்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.
முதலில் சீன பொம்மை டிசம்பர் மாதம், 'நாங்கள் ஒரு வைரஸ் கண்டுபிடித்துள்ளோம்' என்று சொல்கிறது. அதற்கு அமெரிக்கச் சுதந்திர சிலை, 'அதனால் என்ன? இது வெறும் ஃப்ளூதான்' என்று கூறுகிறது. பிறகு சீனாவை சேர்ந்த பொம்மை, இந்த வைரசால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களும் பாதிக்கப்படுவதாகவும், நாங்கள் புதிய மருத்துவ மனைகளை கட்டிவருவதாகவும் சொல்கிறது.
அதற்கு அமெரிக்க சுதந்திர சிலை சீனாவை குற்றம் சொல்லும் விதமாக, மாஸ்க் போட வேண்டாம், லாக் டவுன் தேவை இல்லாதது, நீங்கள் பொய் சொல்கிறீர்கள் , அமெரிக்கா சொல்வது தான் சரி எனவும் மாறி மாறி கூறி கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் சுதந்திர சிலைக்கே கொரோனா தாக்கியதை போலவும் சித்தரித்துள்ளனர்.
இந்த அனிமேஷன் வீடியோவானது தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்ன 'அமெரிக்காவுக்கு' சப்போர்ட்டா?... "உண்டு இல்லன்னு பண்ணிடுவோம்"... கடுமையாக 'எச்சரித்த' சீனா!
- 'இனிமேல் சின்ராச கையிலயே பிடிக்க முடியாது'... 'ஜாலி மூடில் சீனர்கள்'...ஓஹோ இது தான் காரணமா!
- 'சீனாவ அப்படி எல்லாம் சும்மா விட மாட்டேன்'... 'என்கிட்ட டாலர் இருக்கு'... 'டிரம்ப் கொளுத்திய வெடி'... இது எங்க போய் முடிய போகுதோ!
- நடுக்கடலில் 'அமெரிக்க' போர்க்கப்பலை... அடித்து 'விரட்டிய' சீனா... என்ன காரணம்?
- ‘அத’ பண்றதுக்காக ‘சீனா’ எதை வேணாலும் செய்யும்.. அடுத்த புது குற்றசாட்டை தூக்கிப்போட்ட டிரம்ப்..!
- “அமெரிக்காவை டார்கெட் பண்ணி.. சீன ஆய்வகத்தில் உருவானதுதான் கொரோனா!”.. “எங்கிட்ட ஆதாரம் இருக்கு.. ஆனால்..”.. ட்ரம்ப்பின் வைரல் பேச்சு!
- உணவு பொருட்கள்... கச்சா எண்ணெய்... அவசரம் அவசரமாக சேமித்து வைக்கும் சீனா!.. பதற்றத்தில் உலக நாடுகள்!.. என்ன நடக்கிறது?
- 'கொரோனா விஷயத்தில்’... ‘எங்களை தவறாக வழிநடத்துகிறது’... 'திரும்பவும் கொந்தளித்த ட்ரம்ப்’!
- 'தகவல்களைப் பகிர்ந்தால் தான் வழி கிடைக்கும்...' 'கொரோனாவின் ஆரம்பப் புள்ளியை கண்டறிய வேண்டும்...' 'சீனாவிற்கு எதிராகத் திரளும் பாதிக்கப்பட்ட நாடுகள்...!'
- 184 நாடுகளில் 'நரக' வேதனை... 12 முறை 'எச்சரித்தும்' கேட்கவில்லை... வெளியாகியுள்ள 'புதிய' தகவல்...