உங்க 'சங்காத்தமே' தேவையில்ல...! 'உங்கள நம்பினதுக்கு எங்கள நல்லாவே வச்சு செஞ்சுட்டீங்க...' அடுத்தது என்ன நடக்க போகுது...? - கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனை...!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியா (Australia), அமெரிக்கா (America) மற்றும் இங்கிலாந்து (UK) ஆகிய மூன்று நாடுகளும் ஆக்கஸ் (AUKUS) என்ற புதிய அமைப்பை அமைத்தன. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் (China) செல்வாக்கிற்கு எதிராக ஒன்றிணைந்து பாதுகாப்பிற்காக இந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முதல் முயற்சியாக அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்க உள்ளது.
இந்நிலையில், இதற்கு முன்னரே ஆஸ்திரேலியா, பிரான்சிடம் டீசல் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. அதன்படி கப்பல்களின் பணி பாதி முடிவடைந்த நிலையில், ஆக்கஸ் உடன்படிக்கை காரணமாக பிரான்சிடம் போட்டிருந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்தது.
இதனால் கடுப்பான பிரான்ஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை உலக நாடுகளையே திரும்பி பார்க்க செய்துள்ளது.
ஆக்கஸ் உடன்படிக்கையில் இருக்கும் அமெரிக்காவும் பிரான்ஸும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. ஆனால், இந்த ஆக்கஸ் அமைப்பில் அமெரிக்கா பிரான்ஸை தவிர்த்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கியது.
அதுமட்டுமல்லாமல், இந்த ஒப்பந்ததால் ஆஸ்திரேலியா போட்டிருந்த பல்லாயிரக்கணக்கான கப்பல் பணி ஒப்பந்தமும் ரத்து ஆகியது.
இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் யெவ்ஸ் லே டிரியன் நேற்று (18-09-2021) கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'ஆஸ்திரேலியா எங்கள் நாட்டுடனான வர்த்தக உறவை முறித்து கொண்டு, எங்களின் பாரம்பரிய நட்பு நாடான அமெரிக்காவுடன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பம் பெறுவதற்காக கைகோர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் இந்த செயல் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. இதனால், அந்நாடுகளில் இருக்கும் தூதர்களையும் திரும்ப அழைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,' என கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் இந்த அறிவிப்பு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரலேயா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் இந்த அதிரடி முடிவை குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் எமிலி ஹார்ன் கூறும்போது, 'பிரான்ஸ் அமெரிக்காவின் நட்பு நாடு. இப்போது பிரான்ஸ் தங்கள் தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது பற்றி பிரான்ஸ் அரசுடன் அமெரிக்கா பேசி வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகமும், 'நாங்கள் போட்டுக்கொண்ட இந்த ஆக்கஸ் உடன்படிக்கை மூலம் பிரான்சுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை புரிந்து கொள்கிறோம். இந்த அமெரிக்கா உடனான ஒப்பந்தம், எங்களின் தேசிய பாதுகாப்பு நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு' என அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அவ்ளோ 'வெறி' ஆகுது...! எங்க 'முதுகு'ல குத்திட்டீங்க இல்ல...? அப்போ எங்ககிட்ட வந்து 'பேசினதெல்லாம்' சும்மா, அப்படி தானே...? - கடுப்பில் கொந்தளிக்கும் நாடு...!
- 'இங்க ஒண்ணு பேசுறது...' 'வெளிய போய் வேற ஒண்ணு சொல்றது...' 'இதெல்லாம் நமக்கு செட் ஆகாதுங்க...' 'அஷ்ரஃப் கனி அன்னைக்கு 'என்ன' சொன்னார் தெரியுமா...? - கடுப்பில் அமெரிக்கா...!
- 'பெண்கள் 'அந்த' விஷயத்துல ரொம்ப கஷ்டப்படுறாங்க'!.. வேற லெவலில் சிந்தித்த அரசு!.. அதிரடி அறிவிப்பால் வாயடைத்துப் போன உலக நாடுகள்!
- நீங்க மட்டும் 'உம்'னு ஒரு வார்த்தை சொல்லுங்க... 'எடுத்துட்டு போய் பொளந்துருவோம்...' 'இதான் சரியான டைம்...' - நம்ம ஆளுங்க யாரும் அங்க இல்ல...!
- அம்மாடியோவ்..! இவ்வளத்தையுமா அமெரிக்கா விட்டுட்டு போய்ட்டாங்க.. ‘தலைசுற்ற வைக்கும் மதிப்பு’.. பீதியில் உலக நாடுகள்..!
- இது எல்லாத்துக்கும் ‘காரணமே’ இவங்கதான்.. அவங்க எல்லாரும் வெளியேறிட்டா ஒரு ‘குண்டு’ கூட வெடிக்காது.. இரக்கமே இல்லாமல் தாலிபான் சொன்ன பதில்..!
- அய்யோ... என்னங்க சொல்றீங்க..! அடுத்த ‘கொடூர’ திட்டத்தை தீட்டிய ஐஎஸ்ஐஎஸ்.. அமெரிக்க ஜெனரல் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்..!
- 'திடீரென ஸ்மார்ட் போனை பார்த்து அலறிய பயணி'... 'என்ன சத்தம்ன்னு பார்க்க ஓடி வந்த 'Air Hostess' போட்ட அலறல் சத்தம்'... நடு வானில் இதயத்துடிப்பை நிற்க வைத்த சம்பவம்!
- உண்மையாவே 'அந்த சம்பவத்த' செஞ்சது 'பின் லேடன்' தானா...? - '20 வருஷம்' கழிச்சு தாலிபான்கள் தெரிவித்துள்ள 'ஷாக்' தகவல்...!
- சத்தமே இல்லாம 'எத்தனையோ' சம்பவங்கள் நடந்துருக்கு...! ஒரு காலத்துல 'எப்படி' இருந்த இடம்...! - இன்னைக்கு 'அடையாளமே' தெரியாம மாறிடுச்சு...!